அச்­சத்­துடன் வாழும் நீர்­கொ­ழும்பு முஸ்லிம்கள்

218

ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை அடுத்து நீர்­கொ­ழும்பு மக்­களின் இயல்பு வாழ்க்கை முற்­றாக பாதிப்­ப­டைந்­துள்­ளது.

நகரில் மக்கள் நட­மாட்டம் குறை­வாகக் காணப்­ப­டு­வ­துடன்  நீர்­கொ­ழும்பு – சிலாபம் பிர­தான வீதியில் அமைந்­துள்ள பிர­ப­ல­மான உண­வ­கங்கள் மூடப்­பட்­டுள்­ளன. அத்­துடன் வியா­பார நடவடிக்கைகள் மந்தகதியிலேயே இடம்பெற்றதைக் காணமுடிந்தது. முச்­சக்­கர வண்டி சார­தி­களின் தொழில்­துறை பாதிக்­கப்­பட்­டுள்­ளதுடன் பாட­சா­லை­களில்  மாண­வர்­களின் வருகை குறை­வாகக் காணப்­ப­ட்டது. இதனால் கல்வி நட­வ­டிக்­கைகளும் ஸ்தம்­பி­த­ம­டைந்­தன.

நீர்­கொ­ழும்பு நகரம் வெளி­நாட்டு மற்றும் உள்­நாட்டு உல்­லாசப் பய­ணிகள் அதிகம் வருகை தரு­கின்ற நக­ர­மாகும். தற்­போது உல்­லாசப் பய­ணி­களின் வருகை வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளதன் கார­ண­மாக ஹோட்டல் தொழில் துறை­யி­னரும்  அதனை நம்பி வாழ்­கின்ற துணை தொழில்­து­றை­யி­னரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நீர்­கொ­ழும்பில் முஸ்லிம் மக்­களின் வீடுகள்  மற்றும்  பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­டமை, நேற்­று­ முன்­தினம்  குளி­யாப்­பிட்டி உட்­பட பல பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற அசம்­பா­வி­தங்கள் கார­ண­மாக  நீர்­கொ­ழும்பு மக்கள் பெரும் அச்­சத்­துடன் உள்­ளனர். குறிப்­பாக முஸ்லிம் மக்கள் அச்­சத்­து­டன் உள்­ளனர்.

புனித ரமழான் மாதத்தில்  இரவு வேளை­களில் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு சென்று கடை­மையை நிறை­வேற்ற முடி­யாத அச்ச நிலையில் முஸ்­லிம்கள் உள்­ளனர்.

நகரில் இனந்­தெ­ரி­யாத குழுக்கள்  இரவு வேளை­களில் முஸ்­லிம்கள் வசிக்கும் வீடு­க­ளுக்கு சென்று அச்­சு­றுத்தும் செயல்­களில் ஈடு­ப­டு­வது தொடர்ந்தும் இடம்­பெற்று வரு­வ­தாக முஸ்­லிம்கள் குற்­றச்­சாட்டு தெரி­விக்­கின்­றனர்.

முஸ்­லிம்கள் வாழ்கின்ற பகு­தி­களில் பாது­காப்பு தரப்­பினர் காவலில் இருந்தபோதிலும் மக்கள் அச்சத்துடனேயே உள்ளனர். ஊரடங்கு நடைமுறையில் இருந்த வேளையில் பாதுகாப்புப் படையினர் இருந்தபோதே தங்களின் உடைமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

SHARE