பண்டைய எகிப்தில் பயன்படுத்தப்பட்ட மின் விளக்கு – வியப்பூட்டும் மர்மம்

441
எகிப்தில் பண்டைய காலத்திலேயே மின் விளக்கு பயன்படுத்தி இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தின் பழங்கால “டெண்டீரா” என்னும் கோவில் பகுதியில் உள்ள, இரகசிய பெரிய அறைகளில் நடத்தப்பட்ட ஆய்வின் போதே இந்த ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெண்டீரா எனப்படும் அந்த கோவிலில் உள்ள சுவரில் செதுக்கப்பட்டு இருந்த கற்சித்திரங்களை ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று ஆராய்ச்சி செய்துள்ளது. அந்த கோவிலின் நிலவறைகளில் இருந்த இரகசிய பெரிய அறைகள் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகவும், அரசர் மற்றும் மிக முக்கிய மத போதகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட பகுதியாகவும் இருந்திருக்கும் என நம்பப்படுகிறது.

அங்கு ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் ஆச்சர்யத்தையும் அதிசயத்தையும் கொடுத்த கற்சித்திர வடிவம் ஒன்று, இப்போது நமக்கு பரிச்சயமான ஒன்றாக இருக்கும் பொருளை பிரதிபளிப்பதாக இருந்துள்ளது. ஆம். அவர்கள் அங்கு கண்ட அந்த அதியச வடிவம் தற்போதுள்ள அறிவியல் யுகத்தில் நாம் பயன்படுத்தும் மின் விளக்கு போன்றே இருந்துள்ளது.

பெரும் ஆச்சர்யத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தும் இந்த கண்டுபிடிப்பால் பல கேள்விகள் நம் மனதில் எழத் தொடங்குகின்றன.

அந்த காலத்திய எகிப்திய கட்டிடங்களில் வரையப்பட்ட கற்சித்திரத்தில் மின்விளக்கு மாதிரியான சித்திரங்கள் இடம்பெற்றது எப்படி?

அப்போதே எகிப்தியர்கள் மின் விளக்குகளை பயன்படுத்தி இருப்பார்களா? அந்த கும்மிருட்டான நிலவறைகளில் எப்படி வெளிச்சத்தை கொண்டுவந்து இருப்பார்கள்?

இவ்வாறு பல கேள்விகள் எழுந்தாலும், இதற்கான அறிவியல் விளக்க ரீதியான பதில்கள் இதுவரை கிடைக்கவில்லை.

மின்விளக்கு சிற்பத்தை ஆராய்ந்த போது தாமரை வடிவிலான அடிப்பாகமும் அதை சுற்றி பல்பு போன்ற உருவமும், நான்கு பேர் அதை தாங்கி பிடிப்பது போன்றும், பல்பு உருவத்தின் உள்ளாக பாம்பு உருவமும் செதுக்கப்பட்டு இருந்தது.

அப்படியெனில் செதுக்கல் சிற்பம் ஏன் மற்ற பிரமீடுகளில் காணப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது.

இந்த தொழில்நுட்பம் மிக ரகசியமான ஒன்றாக, ரகசிய கருவறைப் பகுதி போல அங்கு அமைக்கப்பட்டு இருப்பதற்கான முக்கிய காரணமும் இருந்திருக்கலாம்.

மேலும் வேற்று கிரகவாசிகள் பிரமிடின் தொழில்நுட்பத்தையும், இது போன்ற பல நுட்ப ரகசியத்தையும் கற்றுக் கொடுத்திருக்கலாம் என்ற ரீதியிலும் ஆய்வுகள் தொடர்கின்றன.

SHARE