சர்வதேச ஆட்ட நடுவர் பட்டியலில் முதல் பெண் நடுவராக இந்தியாவின் ஜி.எஸ்.லட்சுமி

238

சர்வதேச கிரிக்கெட் நிறுவனத்தின் சர்வதேச ஆட்ட நடுவர் பட்டியலில் இடம்பெற்ற முதல் பெண் நடுவர் என்ற பெருமையை இந்தியாவின் ஜிஎஸ்.லட்சுமி பெற்றுள்ளார்.

51 வயதான ஜிஎஸ். லட்சுமி கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் உள்ளூர் மகளிர் கிரிக்கெட் தொடரிலும், 3 மகளிர் ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும், 3 இருபதுக்கு 20 போட்டிகளிலும் நடுவராக பணிபுரிந்தவர்.

இந்நிலையில் தற்போது ஐ.சி.சி ஆட்ட நடுவர் பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் சர்வதேச ஆட்டங்களில் நடுவராக செயல்பட வாய்ப்பு கிட்டியுள்ளது.

ஏற்கெனவே கிளேயர் போலோசக் ஆடவர் ஒருநாள் ஆட்டத்தில் நடுவராக பணிபுரிந்த சிறப்பைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE