அடிப்படைவாதிகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு முகங்கொடுத்து நெருக்கடியான சூழலில் வெசாக் தினத்தை கொண்டாடவுள்ளோம். இத்தினத்தில் வைராக்கியம் மற்றும் பழிவாங்கல் என்ற குணங்களைத் துறந்து புத்தர் கூறிச் சென்றுள்ள நல்வழியில் பயணிப்போம் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தனது வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அனைத்து உலக உயிர்கள் மீதும் அன்பையும் கருணையும் காண்பித்து சாதாரண உலக வாழ்க்கையை வாழ்ந்துக் காட்டிய புத்த பெருமானின் ஜனனதினத்தை நினைவுக் கூறும் இந்த வெசாக் தினத்தில் உலக நாடுகளில் உள்ள அனைத்து பௌத்தர்களுக்கும், இலங்கை வாழ் பக்கத்ர்களுக்கும் மிக முக்கிய சமயரீதியான தினமாகும்.
அடிப்படைவாதிகளின் திட்டமிடப்பட்ட செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து இலங்கை மக்களும் புத்தபெருமான் கூறியிருக்கும் நற் செய்திகளை நினைவுக் கொண்டு செயற்பட வேண்டும். இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுடன் நாம் வெசாக் தினத்தை கொண்டாட வேண்டிய நிலமைகள் ஏற்பட்டாலும் இலங்கை வாழ் அனைத்து பௌத்த மக்களிடமும் நம்பிக்கையும் , தெளிவும் பக்தியும் குறைந்திருக்காது என்று நினைக்கின்றேன்.
வைராக்கியம் பழிவாங்கள் போன்ற குரோதங்களை மறந்து அனைத்து இலங்கை மக்களும் புத்த பெருமானின் ஜனனதின விழாவை கொண்டாடுவோம் எனவும் , அனைத்த பௌத்த மக்களுக்கும் வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டள்ளார்.