புகையிரத திணைக்களத்தின் செயற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்துவதற்காக புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு அதற்கான நிதி உதவியை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிந்து பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி கடனுக்கான உடன்படிக்கையை மேற்கொள்வதற்க்கு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்துக்கு அமைவாக புகையிரைத திணைக்களத்தின் வினைத்திறனை மேம்படுத்தல், பராமரிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தல், தொழில் நுட்ப பயிற்சி நிறுவனங்களை தரமுயர்த்துதல் போன்றவை தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
மேலும் புகையிரத சேவைக்கு காணப்படும் கேள்விகளை சமாளித்துக்கொள்ளும் பொருட்டு புகையித வலையமைப்பை நவீனமயப்படுத்துவதன் மூலம் புகையிரத சேவையை வினைத்திறனுடையதாக மாற்றியமைக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று புகையிரத போக்குவாரத்துக்கான பயணிகளின் ஈர்ப்பை பெற்றுக்கொள்ளல், சந்தை பங்களிப்பை மேம்படுத்தல், வாகன நெரிசலுக்கு தீர்வுக்காணல் உட்பட ஏனைய துறைசார் தொழில்களுக்கு சாதகமான பங்களிப்பை வழங்கவும் தீர்மானிககப்பட்டுள்ளது.