இரத்தினபுரி பிரதேசத்தில் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரு பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எகொட மல்வல பகுதியில் வீடொன்றில் நேற்று வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் குறித்த இரு பெண்களின் சடலங்களும் பிரதேச மக்களால் பொலிஸாருக்கு வழங்க்கப்பட்ட தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ளன.
43 மற்றும் 75 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் தாயும் மகளும் என ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.