கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற கொடூரமான பயங்கரவாத தற்கொலைத் தாக்குல்கள் மற்றும் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்புரகளைப் பேணிவந்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினராலேயே குறித்த நபர் வத்தளை – மாபொல நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் முஹமட் ரிஸ்வான் என புலனாய்வுப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.