புத்தளம் பிரதேசத்தில் இரு தேசிய அடையாள அட்டைகளுடன் பெண்ணொருவர் கைது

278

புத்தளம் பிரதேசத்தில் இரு தேசிய அடையாள அட்டைகளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேச செயலகமொன்றிற்கு அருகில் நேற்று  மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே மேற்படி கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் குறித்த பெண்ணிடம் சோதனைகளை மேற்கொண்ட போது தேசிய அடையாள அட்டையொன்றை காண்பித்துள்ளார். பின் அந்த பெண்ணின் பையை சோதனைக்குட்படுத்தியதில் மேலும் ஒரு அடையாள அட்டை மீட்கப்பட்டுள்ளது.  புத்தளம் பகுதியைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர் யாழ்ப்பாணத்திலும் வசித்துவந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது சந்தேக நபரான பெண்ணை அடையாளப் படுத்தும் வகையில் இரு தேசிய அடையாள அட்டைகள் காணப்பட்டதுடன், அவற்றில் பிறந்த திகதிகளில் வேறுப்பாடு காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

அதற்கமைய 1969 பிறந்திருக்கு மேற்படி பெண் 1979 என பிறந்த திகதியை மாற்றி அமைத்து அடையாள அட்டைகள் இரண்டை தம்வசம் வைத்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் சந்தேக நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE