சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்காவிடின் கடும் நடவடிக்கை

285

ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வாக்குகளை பயன்படுத்தாவிட்டால் எதிர்வரும் தேர்தர்களில் அவர்களுக்கு எதிராக  கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ராவணா பலய அமைப்பு எச்சரித்துள்ளது.

வணிக கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக பொது எதிரணியினர் சபாநாயகரிடம் கையளித்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த ராவணா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தே கந்தே  சத்தாதிஸ்ஸ தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தில் மாத்திரமல்ல இந்த நாட்டில் இருப்பதற்கும் தகுதியற்றவர். சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனை ஆதரிக்கின்றார்களா அல்லது எதிர்க்கின்றார்களா என்பதை நாம் அவதானிப்போம். ரிஷாத் பதியுதீனை தோல்வியடையச் செய்வதற்கு அவர்கள் தமது வாக்குகளை பயன்படுத்தாவிட்டால் எதிர்வரும் தேர்தல்களில் அவர்களுக்கு எதிரான எமது கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE