மீண்டும் நடிக்க வரும் அனுஷ்கா

245

நடிகை அனுஷ்கா மாதவன் ஜோடியாக ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நாயகர்கள் பலருடன் இணைந்து நடித்து தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நாயகியானார்.
ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். கடைசியாக அவரது நடிப்பில் ‘பாகமதி’ படம் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின்னர் அனுஷ்கா படங்களில் நடிக்கவில்லை.
இஞ்சி இடுப்பழகி படத்தில் நடித்த போது ஏற்றிய தனது உடல் எடையை வெளிநாடு சென்று குறைத்துவிட்டு வந்திருக்கிறார். சமீபத்தில் தான் ஒல்லியாக இருக்கும் தோற்றத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் நடிக்க வருகிறார்.
ஹேமந்த் மதுகர் இயக்கும் சைலன்ஸ் படத்தில் மாதவனுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். நம்பி நாராயணன் வாழ்க்கைப் படத்தில் பிசியாகி இருந்த மாதவன், தனது புதிய தோற்றத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சைலன்ஸ் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.
இதுதவிர அனுஷ்கா சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
SHARE