கல்கிஸ்ஸை பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் எனும் போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு 8 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை – வடரப்பல வீதி பகுதியில் நேற்று கல்கிஸ்ஸை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் எனும் போர்வையில் விபச்சார விடுதியொன்று இயங்கி வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, கல்கிஸ்ஸை நீதவான் நீமன்றத்தில் பெற்றுக் கொண்ட பிடியானை உத்தரவின் பின்னே மேற்படி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது முகாமையாளப் பெண்ணொருவர் உட்பட 8 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் பாதுக்க, மொரன்துடுவ , பென்தொட , இபுல்கொட மற்றும் நுகேகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 38 -58 வயதுகளுக்கிடைப்பட்டவர்கள் ஆவர்.
பொலிஸார் சந்தேக நபர்களை கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.