மாத்­த­ளையில் சந்­தே­கத்தின் பேரில் இரு வர்த்­த­கர்கள் கைது

216

மாத்­தளை நகரில் நேற்று முன்­தி­ன­ம் இரவு திடீர் சோத­னை­களை மேற்­கொண்ட இரா­ணு­வத்­தினர் வர்த்­தக நிலையம் ஒன்­றி­லி­ருந்து சந்­தே­கத்­திற்­கி­ட­மான திரா­வகம் நிரப்­பப்­பட்ட சில கொள்­க­லன்கள், ஒரே இலக்­கங்­களைக் கொண்ட மூன்று தேசிய அடை­யாள அட்­டைகள், நான்கு வாகன இலக்கத் தக­டுகள் என்­ப­வற்றைக் கண்டுபிடித்து கைப்­பற்­றி­ய­துடன் சந்­தே­கத்தின் பேரில் இரு வர்த்­த­கர்­க­ளையும் கைது செய்­துள்­ளனர். கைப்­பற்­றப்­பட்ட திரா­வ­கங்கள் அடங்­கிய கொள்­க­லன்­களில் எச்­ச­ரிக்கை சுலோ­கங்கள் காணப்­ப­டு­வ ­தா­கவும் இரா­ணு­வத்­தினர் தெரி­வித்­துள்­ளனர்.  நேற்­று­முன்தினம் இரவு இரா­ணு­வத்­தினர் மாத்­தளை நகரில் வர்த்­தக நிலை­யங்கள், ஹோட்­டல்கள், வீடுகள் உட்­பட அனைத்து இடங்­க­ளையும் திடீர் சோத­னைக்­குட்­ப­டுத்­தினர்.

அதன்­போதே இரு வர்த்­த­கர்­க­ளையும் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்து கைப்­பற்­றப்­பட்ட பொருட்­க­ளுடன்  மாத்­தளைப் பொலி­ஸாரிடம் கைய­ளித்­தனர்.

பொலி­ஸாரால் கைப்­பற்­றப்­பட்­டுள்ள திரா­வ­கங்கள் மனித உட­லுக்குக் கேடு விளை­விக்கக் கூடி­ய­தாக இருக்­கலாம் என சந்­தே­கித்து, அவற்றை இர­சா­யன பகுப்­பாய்­வுக்­கு உட்­ப­டுத்த நட­வ­டிக்­கை­களை எடுத்து வருவதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் மாத்தளை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவிருந்ததாகவும் தெரிவித்தனர்.

SHARE