தஜிகிஸ்தானிலுள்ள சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 32 பேர் பலி

221

தஜிகிஸ்தானிலுள்ள சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் பலர் ஐ.எஸ். சிறைக் கைதிகள் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

தஜிகிஸ்தானில் வாக்தத் நகரில் உள்ள சிறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதிகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. குறித்த மோதல் பின்னர் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் கைதிகள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

கலவரத்தை அடக்கமுடியாத நிலையில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு  மேற்கொண்டனர்.

இந்தக் கலவரத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 சிறை அதிகாரிகளும் அடங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் பலர்  ஐ.எஸ். தீவிரவாதிகள் என அந்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் கலவரத்திற்குத் தூண்டுதலாக இருந்தவர் தஜிகிஸ்தான் படைப் பிரிவின் தலைவராக இருந்த கல்முரட் காலிமொவ்வின் மகன் பெக்ரஸ் குல்மர்ட் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அந்நாட்டின் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது சிறையில் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், கலவரம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

SHARE