பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தில் ஏறிய நபரொருவரினால் பரபரப்பு

261

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமான ஈபிள் கோபுரத்தில் ஏறிய நபரொருவரினால் அப்பகுதியில் பரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸின் பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தில் அனுமதிக்கப்பட்ட தடத்தில் மட்டுமே சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிடலாம்.

ஆனால் நேற்று திடீரென மர்மநபர் ஒருவர்  ஈபிள் கோபுரத்தில் ஏற முயற்சித்துள்ளார்.இதனால் அச்சம் அடைந்த அதிகாரிகள் ஈபிள் கோபுரத்தில் இருந்தவர்களை அவசரமாக வெளியேற்றினர்.

மேலும் புதிய பார்வையாளர்களுக்கும் தடை விதித்ததோடு,குறிப்பிட்ட நபரை 6 மணி நேரம் போராடி பொலிசார் கைது செய்தனர்.

இவ்வறு கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்தோடு இந் நபர் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில்,தான் ஈபிள் கோபுரத்தில் ஏறும் ஆர்வத்தில் இவ்வாறு நடந்துக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

SHARE