ஹோமாகமையிலுள்ள ஹபரகடை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

260

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

ஹோமாகமையிலுள்ள ஹபரகடை பகுதியில் வைத்து போதைப்பொருளுடன் குறித்த நபரை பொலிஸ் போததைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் 27 வயதுடையவர் எனவும் அவரிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் நிறையுடைய ஹெரொயின் போதைப்பொருளை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE