மினுவாங்கொடை வன்முறை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 32 பேருக்கு பிணை – நீதிமன்றம் உத்தரவு

253

மினுவாங்கொடையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 32 சந்தேக நபர்களையம் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 12, 13 ஆம்  திகதிகளில் மினுவாங்கொடை பிரதேசத்தில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

அப்பகுதியில் பல வீடுகள், கடைகள் என்பன வன்முறையாளர்களால் தேசப்படுத்தப்பட்டதுடன் அப்பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு, வன்முறைகளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் ஏற்பட்ட கலவரத்தின் போது சந்தேகநபர் 32 பேர் கைதுசெய்யப்பட்டு அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அவர்களை பிணையில் செல்லுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE