நடிகர் ஆர்யா திருமணம் எப்போது என்ற பெரிய கேள்விக்கான பதிலும் வந்துவிட்டது. அடுத்து விஷால் தான், அனிஷா என்பவருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது, திருமணம் எப்போது சரியாக தெரியவில்லை.
ஆகஸ்ட் 9ம் தேதி அவரது திருமணம் என்றும் சென்னையில் ஒரு பெரிய ஹோட்டலில் நடக்கும் என்றனர். ஆனால் விஷால் தனது திருமணம் நடிகர் சங்க கட்டடத்தில் நடக்கும் என்று எப்போதோ கூறிவிட்டார்.
தற்போது அந்த கட்டடம் 60% முடிந்துள்ளதாம், எப்போது முழுதாக முடியும் என்பது தெரியவில்லை.
பாதி கட்டடத்தில் விஷாலின் திருமணத்தை நடத்த அவரது அம்மாவிற்கு பிடிக்கவில்லையாம். இதனால் பெரிய குழப்பத்தில் விஷால் உள்ளார் என்கின்றனர்.
கட்டடம் முடிய 1 வருடம் ஆகும் என்று கூறுகிறார்கள், விஷால் திருமணம் எப்போது, எங்கே என்பதை பொறுத்திருந்து அறிவோம்.