இலங்கையில் காட்சிப்படுத்தப்படும் அனைத்து பெயர் பதாதைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மாத்திரமே இருக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்விடயத்தை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார்.
மேலும், இந்த மூன்று மொழிகளும் தவிர்ந்த வேறு மொழிகளை பயன்படுத்தக் கூடாது எனவும் பிரதமர் உறுதியாக உத்தரவிட்டுள்ளார்.