வவுனியா நகரசபை தேசிய அரச பொது ஊழியர் சங்கத்தின் செயலாளரினால் வவுனியா நகரசபை சுகாதாரப்பகுதி தொழிலாளர் ஒருவருக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையின் சுகாதாரப்பகுதி தொழிலாளர் ஒருவருக்கே நேற்று முன்தினம் நகரசபை பொது நூலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரும் தேசிய அரச பொது ஊழியர் சங்கத்தின் செயலாளருமான கோல்டன் என்பவருக்கு எதிராகவே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதாரப்பகுதியில் இடம்பெற்று வந்த தொடர்ச்சியான முறைகேடான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி எதிர்த்ததன் காரணமாகவே இக் கொலை அச்சுறுத்தலை தொலைபேசியூடாக தன்மீது மேற்கொண்டுள்ளதாகவும் இதற்கான உரையாடல் ஆதாரமும் தன்வசம் வைத்திருப்பதாகவும் நகரசபை சுகாதாரத் தொழிலாளியான முறைப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார்.