வடகொரிய சரக்குக் கப்பலை அமெ­ரிக்கா உட­ன­டி­யாக விடு­விக்க வேண்டும் – வட கொரிய தூதுவர்  கிம் சோங் 

268

அமெ­ரிக்கா வடகொரிய சரக்குக் கப்பலை மூர்க்­கத்­த­ன­மான முறையில் கைப்­பற்றி வைத்­துள்­ளமை அமெ­ரிக்க மற்றும் வட கொரிய உற­வு­களின் எதிர்­கா­லத்தில்  பாதிப்பை ஏற்­ப­டுத்தக் கூடியது என ஐக்­கிய நாடுகள் சபைக்­கான வட கொரிய தூதுவர்  கிம் சோங்  எச்­ச­ரித்­துள்ளார்.

அந்த சரக்குக் கப்­பலை அமெ­ரிக்கா உட­ன­டி­யாக விடு­விக்க வேண்டும் என அவர்  நேற்று ஊட­க­வி­ய­லா­ளர்கள் மாநாடொன்றில் கலந்து கொண்டு  கருத்து வெளியி­டு­கையில்  வலி­யு­றுத்­தினார்.

வட கொரி­யாவின் இரண்­டா­வது மிகப் பெரிய சரக்குக் கப்­ப­லான வைஸ் ஹொன ஸ்ட் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பெரு­ம­ளவு நிலக்­க­ரியை ஏற்றிச் சென்றவேளை இந்­தோ­னே­சி­யாவால் முதலில் தடுத்து வைக்­கப்­பட்­டிருந்தது.

இந்­நி­லையில் அந்தக் கப்பல் ஐக்­கிய  நாடுகள் தடையை மீறி  நிலக்­க­ரியை ஏற்றிச் சென்­றதால் அதனை கைப்­பற்­றி­யுள்­ள­தாக  அமெ­ரிக்கா கடந்த 9 ஆம் திகதி அறி­வித்­தி­ருந்­தது.

வட கொரி­யா­வு­ட­னான உற­வுகள் தொடர்பில் மென்­மை­யான போக்கு கடை­பி­டிக்­கப்­படும் தரு­ணத்தில் இத்­த­கைய நடவடிக்கையொ­ன்று முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது இதுவே முதல் தடவை­யாகும்.

சரக்குக் கப்பல் கைப்­பற்­றப்­பட்­டது முதற்­கொண்டு அமெரிக்காவின் ஒவ்­வொரு நகர்­வையும் வடகொரியா உன்­னிப்­பாக அவதானித்து வரு­வ­தாக கிம் சோங் தெரி­வித்தார்.

அந்தக் கப்­பலை கைப்­பற்றும் நட­வ­டிக்கை வடகொரியா மீது ஆகக் கூடிய அழுத்­தத்தைப் பிர­யோ­கித்து அந்த நாட்டை மண்டியிடச் செய்யும் நோக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக  அவர் கூறினார்.

அமெ­ரிக்கா தனது மூர்க்­கத்­த­ன­மான  செயற்­பா­டுகள்  எதிர்­கால முன்­னேற்­றத்தில்  ஏற்­ப­டுத்தக் கூடிய விளை­வுகள் குறித்து  சிந்தித்துப் பார்க்க வேண்டும் என கிம் சோங் மேலும் தெரி­வித்தார். அந்த சரக்குக் கப்­பலை கைப்­பற்­றி­யுள்­ளமை வடகொரியாவுக்கு எதி­ரான அமெ­ரிக்­காவின் தீவிர விரோத மனப்­பான்­மையின் வெளிப்­பாடொன்றாக உள்­ள­தாக  அவர் கூறி­னார்.

அமெ­ரிக்கா  சர்­வ­தேச சட்­டத்­தையும் நாடு­க­ளுக்கும் அவற்றின் உடை­மை­க­ளுக்கும் எதி­ராக  பிற நாடுகள்  சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தி­லி­ருந்து பாது­காப்பு அளிக்கும் 2004 ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் உடன்­ப­டிக்­கை­யையும் மீறி வரு­வ­தாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்­நி­லையில் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் அந்­தோ­னியோ கட்­டரெஸ்,  கொரிய தீப­கற்­பத்­தி­லான ஸ்திரத்தன்­மைக்கு பங்களிப்புச் செய்யக் கூடிய அவ­சி­ய­மான நட­வ­டிக்­கை­களை  முன்னெ­டுக்க அழைப்பு விடுத்­துள்ளார். ஆனால் அந்நடவடிக்கைகள் எவை என்­பது தொடர்பில் வின­வப்­பட்ட கேள்­வி­யொன்­றுக்கு பதி­ல­ளிக்க அவர்  மறுத்­துள்ளார்.

SHARE