தமிழ், தெலுங்கு, கன்னடம் என படங்களில் நடித்து வந்த பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் கிராமத்தை தத்தெடுத்து அதற்காக பல மேம்பாடுகள் செய்து வருகிறார். அண்மைகாலமாக அரசியலில் தீவிரமாக இறங்கிவிட்டார்.
பிரதமர் மோடிக்கு எதிராக அவர் கருத்துக்களை பேசி சர்ச்சையில் சிக்கினார். பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட அவர் வெறும் 30 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று பின் தங்கியுள்ளார்.
அவருடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் 2.86 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தற்போது அவர் 12,517 வாக்குகள் பெற்று பின்னிலையில் இருக்கிறார். பதிவான வாக்குகளில் 2.3 சதவீதம் தான் இவருக்கு பதிவாகியுள்ளது.