புதிய அரசிடம் எதிர்பார்ப்பது – நடிகைகள் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங்

259

லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி தான் முன்னிலை வகித்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் அமைவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் புதிதாக அமையயுள்ள அரசிடம் தாங்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதை நடிகைகள் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்சிங் கூறியுள்ளனர்.

தன்னுடைய எதிர்பார்ப்பு குறித்து சாய் பல்லவி கூறியதாவது, இங்கே ஒவ்வொரு பிரச்சினையின் போதும் சில நாட்கள் அதை பற்றி பேசுவதும், பின்னர் மறந்துவிடுவதும் தொடர்கிறது. இதற்கு பொள்ளாச்சி சம்பவம் தான் மிகப்பெரிய உதாரணம். இதுபோன்ற சம்பவங்களில் நடவடிக்கை எடுப்பதில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

ரகுல் ப்ரீத் சிங் கூறுகையில், இங்கு நிலவும் பிரிவினை வாதத்தை ஒழிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் சமமான உரிமைகளை பெறவேண்டும். சாதி, மத, பிரிவினையை தடுக்க வேண்டும். அடுத்து கல்வியில் கவனம் செலுத்தவேண்டும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.

 

SHARE