ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கு இலங்கை அணிக்காக ஏதாவது வகையில் பங்களிப்பினை மேற்கொள்ள வருமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த அழைப்பினை மஹேல ஜயவர்தன நிராகரித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராகவிருந்து அணியை சிறப்பாக வழிநடத்தி கிண்ணத்தை பெற்றுக் கொடுத்தார்.
இந் நிலையில் இலங்கையின் கிரிக்கெட்டை துறையை மேம்படுத்த ஜயவர்த்தன உள்ளிட்டோர் சமர்ப்பித்த அறிக்கையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கருத்திற்கொள்ளவில்லை.
இதனால் அதிருப்தியில் இருந்த ஜயவர்த்தன, ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடருக்கு ஏதாவது வகையில் பங்களிப்பினை ஆற்ற வருமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த அழைப்பினை தட்டிக்கழித்துள்ளார்.