உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – இன்ஷமாம் உல்ஹக்

297

ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணியை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தேர்வுக்குழு தலைவருமான இன்ஷமாம் உல்ஹக் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியை மக்கள் மிக தீவிரமாக எடுத்துக் கொண்டு உன்னிப்பாக கவனிக்கிறார்கள். உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே மகிழ்ச்சி அடைவோம் என்று கூட சிலர் சொல்கிறார்கள்.

உலக கோப்பை போட்டியில் நாங்கள் இதுவரை இந்தியாவை வென்றதில்லை. அந்த சோகத்தை இந்த உலக கோப்பையில் தகர்ப்போம் என்று உறுதியாக நம்புகிறேன்.

இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் மட்டுமல்ல, எல்லா ஆட்டங்களும் எங்களுக்கு முக்கியம் தான். எல்லா அணிகளையும் வீழ்த்தக்கூடிய திறமை எங்கள் அணியினரிடம் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணி எதிர்வரும் 16 ஆம் திகதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

உலக கிண்ண வரலாற்றில் பாகிஸ்தான் அணி இதுவரை இந்தியாவுக்கு எதிராக மோதியுள்ள 6 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE