வவுனியா நெளுக்குளம் சாம்பல்தோட்டம் சந்திப்பகுதியில் நேற்று மதுபோதையில் கிராம மக்களை அச்சுறுத்திய நபர் ஒருவரை இடியன் துப்பாக்கியுடன் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போது நபர் ஒருவர் மதுபோதையில் கிராம மக்களை அச்சுறுத்தி வருவதாக கிடைத்த தகவல் ஒன்றில் நேற்று சாம்பல்தோட்டம் டிஸ்கோ சந்திப்பகுதியில் குறித்த நபர் வீட்டிற்குச் சென்ற பொலிசாரைக் கண்டதும் குறித்த நபர் தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து குறித்த நபரை துரத்திச் சென்ற பொலிசார் அவரைக் கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது இடியன் துப்பாக்கி ஒன்றினை தன்வசம் வைத்திருந்தமை பொலிசாருக்குத் தெரியவந்துள்ளது.
இடியன் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த 33வயதுடைய குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.