விஜய் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பெரிய நடிகர். பார்க்க அமைதியாக இருப்பார் ஆனால் இவரது படங்கள் வசூலில் அப்படி கலக்கும்.
அட்லீ இயக்கிவரும் புதிய படத்தின் மேல் தான் அனைவரும் எண்ணமும் உள்ளது. விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. தயாரிப்பு நிறுவனமும் படத்தின் வியாபாரத்தில் படு பிஸியாக உள்ளனர்.
விஜய்யின் மெர்சல் ரூ. 65 கோடிக்கும், சர்கார் ரூ. 80 கோடிக்கு மேலும் தமிழ்நாட்டில் விலைபோனது. இப்போது தளபதி 63 படத்தை இதற்கும் அதிகமாக வாங்க பலர் முன்வருகிறார்களாம். ஆரம்பமே ரூ. 70 கோடிக்கு மேல் தான் விஜய் படங்கள் பேசப்படுவதாக சினிமா வட்டாரங்களில் கூறுகின்றனர்.