96 படம் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம். இப்படம் தமிழகம் தாண்டி கேரளாவிலும் மெகா ஹிட் ஆக, தெலுங்கு, கன்னடத்தில் ரீமேக் கூட ஆகியுள்ளது.
இந்நிலையில் தன் பாடலை அனுமதியில்லாமல் ஒரு படத்தில் பயன்படுத்துவதை ஆண்மையில்லையா? என்ற கடுமையான வார்த்தைகளால் இளையராஜா கண்டித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் பாடல்களை தற்போது வரும் படங்களில் கூட அங்கொன்றும் இங்கொன்றும் பார்க்கலாம். சமீபத்தில் த்ரிஷா-விஜய் சேதுபதி நடித்த 96 படத்தில் த்ரிஷா இளையராஜா பாடல்களை தான் பாடுவது போல காட்டப்படும்.
இது பற்றி ஒரு பேட்டியில் இளையராஜாவிடம் கேட்டதற்கு, ‘இது தவறான விஷயம். படத்தின் பிளாஷ்பேக்கில் அந்த காலகட்டத்தில் நான் இசையமைத்த பாடல் ஏன் வைக்கவேண்டும். இப்போது உள்ள இசையமைப்பாளரே அந்த காலத்திற்கு தகுந்த ஒரு பாடலை இசையமைக்க முடியாதா. இது ஆண்மை இல்லாத தனம் போல உள்ளது” என தெரிவித்துள்ளார்.
இதற்கு 96 படக்குழு தரப்பிலிருந்து பதிலடி தரப்பட்டுள்ளது, அதில் 96 பாடல்களுக்கு நாங்கள் ராயல்டி கொடுத்துள்ளோம் என கூறியுள்ளனர்.
மேலும், இளையராஜாவின் பல பாடல்களை அவருடைய மகன் யுவன் தன் படங்களில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.