சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வந்த இளம் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் மிஸ்டர் லோக்கல்.
இப்படம் தயாரிப்பாளருக்கு ஒரு நல்ல லாபத்தை கொடுத்தாலும், விநியோகஸ்தர்களுக்கு பெரும் அடியாக விழுந்துள்ளது.
ஆம், சிவகார்த்திகேயன் சீமராஜா படம் தோல்வி கொடுத்தாலும், பெரிய நஷ்டத்தை எல்லாம் தரவில்லை, அந்த படம் தமிழகத்திலேயே ரூ 45 கோடி வரை வசூல் செய்தது.
ஆனால், மிஸ்டர் லோக்கல் படுதோல்வி என்ற இடத்தை பிடித்துள்ளது, சிவகார்த்திகேயன் தன் திரைப்பயணத்தில் சந்தித்த முதல் படுதோல்வி இது தானாம்.