வவுனியாவில் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட மர்ம வீடு

336

வவுனியா மரக்காரம்பளையிலுள்ள கைவிடப்பட்ட மர்ம வீடு ஒன்று இன்று காலை படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சில பொருட்கள் ஆவணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை படையினர் மற்றும் புலனாய்வுப்பிரிவினர் இணைந்து மரக்காரம்பளையிலுள்ள பாவனையற்ற கைவிடப்பட்ட வீடு ஒன்றினை நீதிமன்ற அனுமதியுடன் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அங்கு கைவிடப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உடல் அங்கிகள், ஆவணங்கள், மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடு என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸாரும் புலனாய்வுப்பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE