“அவர் நல்ல நடிகர் மட்டும் அல்ல, நேர்மையானவரும் கூட” – நடிகை காஜல் அகர்வால்

346

தென்னிந்தியாவில் முன்னணி நடிகை காஜல் அகர்வால். அவர் பல வருடங்களாக முன்னணியில் இருக்கும் நிலையில் பல டாப் ஹீரோக்கள் உடன் ஜோடியாக நடித்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?’ என்ற கேள்விக்கு, “தமிழில் விஜய், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர்” என பதில் அளித்துள்ளார்.

மேலும் ஜூனியர் என்டிஆர் பற்றி பேசும்போது “அவர் நல்ல நடிகர் மட்டும் அல்ல, நேர்மையானவரும் கூட. ஆனால் கொஞ்சம் திமிர் பிடித்தவர் அவர். இருந்தாலும் அதிலும் ஒரு நேர்மை இருக்கும். அதனால் அவரை பிடிக்கும்” என தெரிவித்துள்ளார் காஜல்.

SHARE