மகப்பேற்று வைத்தியர் தொடர்பான விசாரணைக்காக ஆறு பேர் அடங்கிய குழு நியமனம்! – சுகாதார அமைச்சு

323

கைதுசெய்யப்பட்டுள்ள  குருணாகல் போதனா வைத்தியசாலையின்   மகப்பேற்று வைத்தியர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவென  வைத்தியர்  அனில் சமரநாயக்க தலைமையில் உடன் அமுலுக்கு வரும் வகையில்  ஆறு பேர் அடங்கிய குழுவொன்றை  சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.

இது தொடர்பான முழு விசாரணைகளை முன்னெடுத்து ஒரு வாரத்துக்குள்  ஆரம்ப அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் இந்த குழுவுக்கு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

அதற்கமைவாக ஒருவாரத்துக்குள்  ஆரம்ப அறிக்கையையும் ஒரு மாத காலத்துக்குள் பூரணமான அறிக்கையும் விசாரணை குழு சமர்ப்பிக்க வேண்டும்.  இந்த குழுவில் நிர்வாக சேவை அதிகாரி  எல்.ஏ. பஸ்நாயக்க, ஓய்வுப்பெற்ற மகப்பேற்று விசேட நிபுணர் லக்ஷ்மன் சேனாநாயக்க. மகப்பேற்று விசேட நிபுணர் வைத்தியர் யு.டீ.டி. ரத்னசிறி, வைத்தியர் சஞ்சீவ கொடகந்தகே மற்றும் விசாரணை அதிகாரி எஸ்.ஐ.குணரத்ன ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த விசாரணைக்குழுவில்  ஸ்ரீ லங்கா மருத்துவ கவுன்சில் சார்பில் எவரும் பங்குக்கொள்ள வில்லை.  குருணாகல் வைத்தியர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கவென  ஸ்ரீ லங்கா மருத்துவ கவுன்சில் மூலம் தனியான குழு அமைத்து விசாரணைகளை முன்னெடுக்க கவுன்சிலின் செயலாளருக்கு  சுகாதார அமைச்சு பணித்துள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.

SHARE