தீவிரவாதிகளுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் சவுதி – பாகிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு

395
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 06:50.29 மு.ப GMT ]
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நிதி உதவியை சவுதி அரசாங்கம் அளித்து வருவதாக பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு சவுதி அரேபியா சட்டவிரோதமாக நிதி உதவி அளித்து வருவதாக பாகிஸ்தானின் உள்துறை மாகாண ஒருங்கிணைப்பு அமைச்சர் ரியாஸ் ஹுசைன் பிர்சதா (riaz hussain pirzada)கடந்த மாதம் குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, பாகிஸ்தானில் தீவிரவாத எண்ணத்தோடு இருப்பவர்களை மேலும் தூண்டிவிடும் நோக்கத்தோடு சவுதி அரேபிய அரசு நிதி உதவி அளிப்பதாக சில பத்திரிகைகள் சமீப காலமாக தவறான செய்திகளை பரப்பி வருகின்றன.

நிதியுதவி கேட்டு வரும் விண்ணப்பங்கள் குறித்து உண்மைத்தன்மை உறுதி செய்த பின்னரே மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும், கருத்தரங்குகளுக்கும் நிதியுதவி அளிக்கிறோம்.

நிதியுதவி மக்கள் நலத்திட்டங்களுக்குதான் அளிக்கப்படுகிறது. இந்த உதவி ஒருபோதும் தீவிரவாத குழுக்களுக்கு வழங்கப்படுவதில்லை என கூறப்பட்டுள்ளது.

 

SHARE