கேரளாகஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் கைது

344

கம்பஹா  – மஹர –  றோயல்  கார்ட்ஸ்  பகுதியில்   20 கிலோகிராமிற்கும்  அதிக  நிறையுடைய கேரளாகஞ்சாவுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிடப்பட்ட குற்றத்தடுப்பு  பிரிவினருக்கு நேற்று  சந்தேகத்திற்கு  இடமான  காரொன்று தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கார் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது அதிலிருந்து 20 கிலோகிராம் 362 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 30 வயதுடைய, கொழும்பு – நாகலகம்வேதி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் மஹர நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளதோடு,பொலிஸார் மேலதிக விசாரணைகளும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE