சிலருக்கு சருமத்தில் எப்போது எண்ணெய் வழிந்துகொண்டே இருக்கு. இதன் காரணமாக சருமம் பொலிவிழந்து காணப்படும். இனி கவலை வேண்டாம். (potato face pack) உருளைக்கிழங்கு தீர்வாகிறது.
உருளைக்கிழங்கு சாறுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும். பின்பு இவற்றை ஒரு காட்டன் பஞ்சியில் நனைத்து முகத்தில் தடவ வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ முகத்தி இருக்கும் தேவையற்ற எண்ணெய் பசை நீங்கி சருமம் பொலிவுடன் காணப்படும்.
ஒரு பௌலில் உருளைக்கிழங்கு சாறு – 3 ஸ்பூன், தேன் – 2 ஸ்பூன் எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும். இதனை உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்த பின்னர் 15 நிமிடங்கள் காய விடவும். முழுவதும் காய்ந்தவுடன் முகத்தைக் கழுவுங்கள். இதனை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு பௌலில் உருளைக்கிழங்கு சாறு – 2 ஸ்பூன், எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன், தேன் – 1/2 ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு தண்ணீரால் முகத்தைக் கழுவவும். இதனை ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வரலாம்.
இந்த பேக் முகத்தில் உள்ள அதிக எண்ணெயைப் போக்கி, அடைப்பட்ட துளைகளைத் திறந்து சருமத்தை பளிச்சிட வைக்கிறது. மேலும் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது.