ஹங்வெல்ல பகுதியில் ஆறு பேர் கைது

477

ஹங்வெல்ல பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்கஸ்ஹேன பகுதியில் நேற்று புதையல் அகழ்வில் ஈடுப்பட்ட  ஆறு பேரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

தித்தெனிய , இங்கிரிய , ஹங்வெல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 – 29 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் அகழ்விற்காக பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸார் சந்தேக நபர்களை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE