இற்றைக்கு மனித குலம் தோன்றி பல நூற்றாண்டுகளைக் கடந்தாயிற்று. அரசியல், பொருளா தாரம், சமூகம் என்று எல்லாவற்றையும் எமது உள்ளங்கையில் வைத்து மனிதன் இயந்திர வாழ்வை ஏற்று பழகியதன் விளைவே இன்று தமிழ் மக்கள் தமது அடையாளங்ளை தொலைக்கக் காரணமாக அமைந்துவிட்டது.
தமிழ் தேசிய இனத்தின் அடையாளம் அவர்களின் கலை, பண்பாடு, பாரம்பரியம், மொழி, அவர்களின் வாழ்க்கை முறை சார்ந்த நிலம் கடல் ஆகாயம் என்பனவோடு வழிபாட்டு பழக்கவழக்கங்கள், தாவ ரம், விலங்கு, பொருளா தாரம், சொத்துக்கள், மரபு வழிச்சின்னங்கள் என தமிழர்களின் வரலாறு நீண்டு செல்கின்றது.
இதில் தமிழ் கலாச்சாரம் தமிழ் மக்களின் பண்பாடு ஆகும். தமிழர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரி கத்திலும் சிறந்திருந்தனர் என்பதை சங்க இலக்கி யங்கள் உணர்த்துகின்றன.
மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர். தமிழர்களின் கலை, கலாச்சாரம் உலகம் முழுவதும் வாழக்கூடிய தமிழர்களின் வாழ்க்கையில் வேரூன்றி உள்ளது.
தமிழர்களின் கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண் டாட்டங்கள், தத்துவம், சமயம், மரபுகள், சடங்குகள், நிறுவனங்கள், அறிவி யல் என இன்னோரன்ன விடயங்களின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.
இவ்வாறான ஒரு இனத்தின் வரலாறு மறைக்கப் படுமாயின் அவ்வினம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிப் பார்ப்போம். தமிழருடைய கலை கலாச்சாரம் என்பது அவர்களது வாழ்வியலோடு ஒன்றாகக் கலந்துள்ளது. தமிழினத்தினுடைய தொன் மையை அவர்களின் கலாச்சாரத்தை வாழ் வியல் அம்சங்களை தமிழ் மொழியில் தேடிப் பார்க்கவேண்டி உள்ளது. வரலாறு ஒரு நாட்டின் பண்டைய இருப்பு, பெருமை, வளம் உட்படபல்வேறு சிறப்புகளை வெளிப்படுத்தும் ஆதாரமாய் உள்ளது. வரலாற்றையும் வரலாற்று சின்னங்களையும் பேணிப் பாதுகாக்க வேண்டியது எமது சமூகத்தின் தலையாய கடமை.
ஆனால் தற்போது எமது சமூகத்தில் தமிழ் மக்களின் வரலாற்று சான்றாதாரங்கள் மிகவும் துரிதமாக மறைக்கப் படுகின்றன. உதாரணமாக தற்கால பாடநூல்களில் தமிழ் மன்னர்களின் வரலாற்றை காண முடிவதில்லை. இலங்கையின் வரலாற்றை திரிபுபடுத்துவதில் முனைந் துள்ளனர். அதேவேளை தமிழ் மக்களின் வழிபாட்டு சின்னங்கள், தொல்பொருட் சான்றுகள், பூர்வீக நிலங்கள் அத்தோடு வழிபாட்டுத் தலங்கள் தமிழ் மக்களின் காடுகள்; (இயற்கை) விளை நிலங்கள் திட்டமிட்டுக் கையகப்படுத்தப்பட்டு வருகி ன்றன. அடையாள சின்னங்கள் தற்போது சிறிது சிறிதாக காணாமல் ஆக்கப்பட்டு வருகிறது.
இதற்கு உதாரணம் தான் யாழ் நூலகம். அதாவது ஒட்டுமொத்த தமிழர்களின் சான்றியல் ஆதாரமாக இருந்த நூல்கள் தீமூட்டி ஏரிக்கப்பட்டது. ஒரு இனத்தின் வரலாற்று ஆதாரங்களை எரித்ததன் நோக்கம் அந்த இனத்தை அழித்தொழிக்கும் ஒரு நடவடிக்கையே தவிர வேறொன்று மில்லை. ஒரு இனத்தின் வரலாற்று ஆதாரமும், கலை கலாச்சாரமும் அழிக்கப் படுமாயின் அந்தக் குறிப்பிட்ட இனம் அழிந்ததற்கு ஒப்பாகும். இவை அனைத்தும் திட்டமிட்ட செயற்பாடாகவே இலங்கையில் இடம்பெற்றது. தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது என்பது வேதனை.
இலங்கையில் பௌத்தம் கால்பதிக்கும் முன் 05 ஈச்சரங்கள் இலங்கையில் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்;. ஆனால் இவ்வாறான விடயங்கள் இன்னும் எமது இளம் சமூகத்தினர் மத்தியில் அறியப்படாதும் உள்ள நிலை மைகள் மாறவேண்டும். அத்தோடு தமிழ் மக்கள் தமது வரலாறுகளை உறுதிப்படுத்தும் சான்றா தாரங்களை பேணிப் பாதுகாக்கவேண்டும். தமிழ் மொழியின் பெறுமதியையும் தமிழ் கலை கலாச்சாரத்தின் பெறுமதியையும் உணர வேண்டும். கலை கலாச்சாரம் புறக்கணிக்கப்படும் போது, திட்டமிட்டு அழிக்கப்படும்போது அல்லது பிற கலாச்சாரங்கள் எமக்குள் ஊடுருவும் போது நாம் தனித்துவம் இழந்தவர்களாக மாற்றப்படுவோம்.
நாம் புலம் பெயர்ந்து உலகெங்கும் சிதறிக் கிடக்கின்றோம். அப்படி இருந்தும் நாம் எமது மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு பழக்க வழக்கங்களை கட்டிகாத்து வாழ்கின்றோம். நாம் வாழும் நாடுகளில் தொடர்ந்து கட்டிக்காத்து வாழ முடியுமா? என்பது கேள்வி குறியாக தான் உள்ளது.
எனினும் நாம் வாழும் நாடுகளில் தமிழர்களின் பண்பாட்டையும், கலாச் சாரத்தையும் தத்தம் நாடுகளில் பேணிக் காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆகவே தமிழ் இனத்தின் வரலாற்றைப்பற்றி பேசும் போது அவர்களின் வாழ்வியல் ஆதாரமாக விளங்கும் கலை கலாச்சாரத்தை மறந்து விட முடியாது. ஆகவே தான் இனத்தினுடைய அடை யாளமாக விளங்கும் கலை கலாச்சாரத்தைப் பேணிக் காத்து வாழ்வதே சிறந்தது.
ஹாசினி