சாதிவெறி பிடித்தவர்களாலும் முஸ்லிம் அரசியல்வாதிகளாலும் பணச்செல்வாக்குடையவர்களாலும் தமிழ் மக்கள் உள்ளும் வெளியும் பிரித்தாளப்பட்டனர்.

436
கிழக்கிலங்கை சமுதாய முரண்பாட்டுப்பின்னணி
இலங்கையின்  உள்நாட்டுப் பிரச்சினைகள்,  முரண்பாடுகள், மோதல்கள் போன்றன வௌ;வேறு சமூகக் குழுவினரால் வேறுபட்ட வகையில் அடையாளப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, முரண்படுகின்ற சமுதாயப் பல்வகைமைகள், பெரும்பான்மை சமூகத்தின் மேலாதிக்கமும் அடக்குமுறையும், வரலாற்றுரீதியான இனவெறுப்பும் ஓரங்கட்டலும், பயங்கரவாதமும் அதன்பாற்பட்ட வன்முறைகளும், இனத்துவக் குரோதங்களும் இனஅழிப்பும், உயர்வர்க்க அதிகார துஷ்பிரயோகங்களும் முரண்பாடுகளும், அரசியல் முகாமைத்துவப் பிழைகள் எனப் பலவாறான அடையாளப்படுத்துதல்கள் உண்டு. இவை, ஒவ்வொரு சமூகக்குழுவினரதும் அனுபவத்திலிருந்து வரும் துயரப்பார்வைகள், நம்பிக்கைகள், புலக்காட்சிகள் போன்றவற்றினூடாக முன்வைக்கப்படுகின்ற அடையாளப்படுத்துதல்கள் ஆகும்.  எது எப்படி இருப்பினும், இன்றுள்ள நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மேற்குறிப்பிட்ட எல்லாப் பரிமாணங்களும் உண்டு.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக மூன்று இன மக்களும் வாழ்கின்ற அம்பாறை மாவட்டத்தின் இன முரண்பாடு முற்றிலும் வேறுபட்ட இரு பரிமாணங்களைக் கொண்டது.
1.    சிறுபான்மை மக்கள் என்ற வகையில் இலங்கையின் இனப்பிரச்சினையின் முக்கிய அம்சமான மொழிசார் பாரபட்சங்கள், சிறுபான்மைசார் பாரபட்சங்கள், அடக்கமுறைகள்; மூலம் பாதிப்புக்குள்ளாகும் நிலை காரணமாக எழுகின்ற முரண்பாடுகள்.
2.    அடுத்தடுத்துள்ள கிராமங்களிலுள்ள முஸ்லிம், தமிழ் இனக் குழுமத்துடன் அல்லது சிங்கள இனக்குழுமத்துடன் வாழும்போது பல்வேறு சமூக பொருளாதாரக் காரணங்களால் எல்லைப்புறக் கிராமங்களுக்கிடையில் ஏற்படும் அல்லது ஏற்பட்டு வரும் இனக்கொந்தளிப்புக்கள். இதனை அக்கட்டுரையில் சமுதாய முரண்பாடு என நான் வரையறுக்கின்றேன்.
இந்தவகையில், எல்லா இனக் குழுமங்களையும் நாம் பாதிப்புள்ளாக்கியவர்களாகவும் பாதிக்கப்பட்டவர்களாகவும் இணங்காண முடியும். இரண்டாவது வகையான முரண்பாடுகளும் அதனோடு கூடிய இனக்கொந்தளிப்புக்களும்; கிழக்கு மாகாணப் பிரச்சினையைப் பொறுத்தவரை முக்கிய இடம் வகிக்கின்றது. இம்முரண்பாடுகளை விளங்கிக் கொள்வதற்கு கிழக்கு மக்களின் சமூக, பொருளாதார உறவுமுறைகளையும் அதில் ஏற்படுகின்ற அல்லது ஏற்பட்ட பிணக்கு நிலைகளையும் ஆய்வு செய்தல் அவசியமாகும்.
கிழக்கின் அரசியல்வாதிகளால் குறிப்பிடப்படுவதுபோல் கிழக்கு மாகாணம், குறிப்பாக அம்பாறை மாவட்டம் குழல் பிட்டுப் போன்று மாவும் தேங்காய்ப்பூவுமாக அடுத்தடுத்து வௌ;வேறு இனங்களைக் கொண்ட (குறிப்பாக தமிழ்-முஸ்லிம் கிராமங்கள்) தொடர்ச்சியான கரையோரக் கிராமங்களாக அமைந்துள்ளன. இந்த அண்மித்த தன்மை இனங்களுக்கிடையில் பல்வேறு வகையான சமூக, பொருளாதார உறவு நிலைகளை காலங்காலமாக ஏற்படுத்தி வந்துள்ளது. இவ்வுறவு ஆரோக்கியமானதாக அல்லது சமநீதியான ஒன்றாக இருந்ததாகக் கொள்ள முடியாது.  முஸ்லிம் மக்கள் பாரியளவிலான வியாபார, விவசாய விடயங்களில் முன்னணியில் நின்றது போல், சேவைசார் அல்லது அரசசார் தொழில் துறைகளில் தமிழ் மக்கள் முன்;னணியில் (70களின் நடுப்பகுதிவரை) இருந்து வந்துள்ளனர். பொருளாதார முறைமைகளைப் பொறுத்தவரை,  முஸ்லிம் சமூகம் நிலமானித்துவ சமூக அமைப்பைச் சுற்றியும், முதலாளித்துவ அமைப்புடன் கூடிய வர்த்தக அல்லது சந்தைப் பொருளாதாரத்துடனும் இணைந்ததாகவும் இருந்து வந்துள்ளது. மேலும் அரசுடன் இருந்த சுமுகமான உறவுகள் காரணமாக நிலமானித்துவ அமைப்பை ஸ்திரப்படுத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்களையும் முஸ்லிம்கள் பெற்று வந்துள்ளனர். இதனடிப்படையில் வௌ;வேறு சமுதாயங்களின் ஒன்றன்மீது ஒன்று தங்கி வாழ்தல் இடம்பெற்றே வந்துள்ளது. அவ்வாறே அவ்வுறவு முறைசார்ந்த மேலாட்சியும், பாரபட்சங்களும் இடம்பெற்றும் வந்துள்ளன.
அரச காணிகள் விவசாயப் பயிர்ச்செய்கைகளுக்காகவும் குடியிருப்புகளுக்காகவும் பங்கீடு செய்யப்பட்டபோது அரசின் முகவர்களாக இருந்த இரு சமூகத்தினையும் சேர்ந்த அரச அதிகாரிகள், காரியப்பர்கள், வன்னிமைகளால் காணிப்பகிர்வில்  பாரபட்சங்கள் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் உள்ளன. இது ஏழைத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்படுத்தப்பட்ட பாரபட்சமாகும். அதிகாரத் துஷ்பிரயோகம் காரணமாக பதவிகளில் இருந்தோர்களின் குடும்பங்களுக்குள்ளேயே இவை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமைக்கும் அல்லது அவர்களின் வேலையாட்கள், கொத்தடிமைகளுக்குப் பதிவு செய்யப்பட்டு பின்னர் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமைக்கும் ஆதாரங்களுள்ளன. இவர்கள் பின்னர் இக்காணிகளை ஏழை மக்களுக்கு விற்றுமுள்ளனர். மேலும், வர்த்தக வியாபார முறைக்கூடாக உருவாகிய முதலாளித்துவ சமூகம், பிற்காலங்களில் இவர்களின் காணிகளையும் ஏழை மக்களுக்கு அளிக்கப்பட்ட காணிகளையும் கூட விலை கொடுத்து அறுதியாகவும்; பெற்றுமுள்ளனர். இதேவேளை நியாயமான முறையில் காடு வெட்டி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்ட ஏழை மக்களும் பின்னர் இவர்களுக்கு தங்கள் உரிமைப்பத்திரங்களை விற்றுமுள்ளனர். இந்த நிலமானித்துவ-முதலாளித்துவ வியாபார சமூக அமைப்புக்குள் தமிழ்; மக்கள் பெரும்பாலும் முஸ்லிம்களின் காணியின் குத்தகைக்காரர்களாகவும், முல்லைக்காரர்களாகவும் குறைந்த மட்டத் தொழிலாளிகளாகவும், சம்பளத்திற்கு வேலை செய்யும் இடைத்தர தொழிலாளர்களாகவும் பின்னர் மாற்றமடைந்தனர்;. இந்த வகையான சமூக, பொருளாதார அமைப்பினுள்  தமிழ் – முஸ்லிம் உறவு ஒரு சமமற்ற நிலையுடையதாக மாற்றமடைந்தது.
20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் இருந்தே தமிழ் சமூகம் முஸ்லிம் சமூகத்தை விட கல்வி நிலையில் உயர்நிலையில் இருந்தது. இதன் காரணமாக, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற அரச சேவைத் தொழில்களில், அவர்கள் மேல் நிலையிலும் இருந்து வந்துள்ளனர். கல்வி அறிவு காரணமாக அரச உயர் பதவிகளான வன்னிமை, உடையார், சுப்ரிண்டன், கொஸ்தாப்பு பதவிகளில் இருந்தனர். இது பொருளாதார நில வளம் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கும் அவர்களுக்கு உதவியது. கல்வியில் இருந்த பின்னடைவு நிலைமை காரணமாக, முஸ்லிம் சமூகம் பல்வேறு வகையான பாரபட்சங்களுக்கும் புறக்கணிப்புகளுக்கும் நீண்டகாலமாக உள்ளாக்கப்பட்டு வந்தனர்.
மேலும் 1970இன் நடுப்பகுதிக்குப்பின் அரச தொழில்கள் குறிப்பாக கல்வி, சுகாதாரம் போக்குவரத்து போன்ற தொழில்துறைகளில் அரசியல் சக்திகளைப் பயன்படுத்தி நியாயமான முறையிலோ அல்லது நியாயமற்ற முறையிலோ முஸ்லிம்கள் தாம் செறிந்து வாழும் பிரதேசங்களில் மேலாட்சி நிலையை நிலைநிறுத்திக் கொண்டனர். எழுபதுகளின் நடுப்பகுதிக்குப்பின் தமிழர்களுக்கு அரசியல் தலைமைகள் அல்லது பாராளுமன்ற அங்கத்துவம் செயலற்றதாகவும் அரசின் சேவைகள் கிடைக்கப்பட முடியாததாகவும் மாறியமை இதற்கு ஒரு காரணமாயிற்று.  மேலும் தமிழ் பிரதேசங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம்  பாராளுமன்றப் பிரதிநிதிகளின் கவனத்திலும் தமிழர்கள் தேவைகள், விருப்;புக்கள் உள்ளாக்கப்படவில்லை அல்லது புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளன. இந்த முறைமைகளுக்குள் தமிழ்; மக்கள் பாராபட்சங்களுக்கும், ஓரங்கட்டல்களுக்கும்  இட்டுச்செல்லப்பட்டிருந்தனர்.
கிழக்கின் தமிழ் சமூகம் சாதிய அமைப்புக்களால்  பிளவுபட்ட நிலையில் இருந்தது. நில ரீதியாகவும் அவர்கள் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். சிறுபான்மை வேளாளர் சமூகத்தை தவிர ஏனைய சாதியினர், பெரும்பாலும் முஸ்லிம் கிராமங்களை அடுத்தடுத்துள்ள தமிழ் கிராமங்களில் அல்லது முஸ்லிம் கிராமத்தில் இரு கிராம சேவையாளர் பிரிவுகளில், முஸ்லிம் சமூகத்தினை அண்டி தொழில் உறவு காரணமாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். அதே வேளை, தமிழ் மக்களால், குறிப்பாக தமிழ் சமூகத்தின் சாதியமைப்பில் ‘குறைந்த நிலையிருந்த’ மக்களாலேயே கல்விச்சேவைகள் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்திருப்பதும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.
இவ்வகையான உறவுநிலை, வெளிப்படையாக ஒருவருக்கொருவர் தங்கியிருப்பது போன்றும், இணைந்து இருப்பது போன்றும் தோற்றியபோதும் உள்ளார்ந்த நிலையில், கசப்புணர்வு, விரோதம், பகைமை மிகுந்ததாகவே இருந்து வந்துள்ளது.  இந்நிலைமை, பரஸ்பர நம்பிக்கை, விட்டுக்கொடுப்பு, ஆதரவு, பொறுப்பேற்பு, பிறர் நலன் பேணல் போன்ற சமூக இணக்கப்பாட்டு அம்சங்களுக்கு இடமளிக்கவில்லை.  ஒட்டு மொத்தமாக பார்க்குமிடத்து மிகச்சொற்பமாகத் தத்தமது அந்தஸ்து நிலையிலுள்ளவர்களுடன் சமமாக உறவை தமிழ்-முஸ்லிம் மக்கள் பேணிவந்திருந்த போதும், அதில் கூட பொருளாதார, தொழிற்;போட்டி மறைமுகமாக இருந்து வந்துள்ளது. விளைவாக, பெரும்பாலும் முஸ்லிம்-தமிழ் மக்களின் பொருளாதார, சமூக உறவு சமத்துவமிக்கதாகவும், சம அந்தஸ்துடையதாகவும், சமூக நீதியுடன் பாரபட்சமற்றதாகவும் கட்டமைக்கப்படவுமில்லை, பேணப்படவுமில்லை என்றே தெரியவருகின்றது.
ஆயுதசார் இயக்கங்களின் எழுச்சிக்குப்பின், இக்கசப்புநிலைகள் பல இனமோதல்களுக்கும், பழிவாங்கல்களுக்கும், பல்லாயிரக்கணக்கான சொத்துக்கள், உடமைகள், உயிர்ச்சேதங்களுக்கும் காரணமாயின.  இரு தரப்பினரும் ஒருவரை ஒருவரை அழிப்பதற்கும் அழிவதற்கும் காரணமாயினர். அடிப்படை சமுதாய சமாதானத்; தீர்வுக்கான முன்னெடுப்புக்கள், இக்காரணங்களை இனங்கண்டு அதற்கு பரிகாரமளிப்பதிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டியுள்ளது. இதன் முதற்படியாக, இரு சமூகமும், ‘பக்கச்சார்பற்று, நேர்மையாக விடயங்களை வெளிப்படுத்துதல்’ இணக்கப்பாட்டுக்கான எந்த முன்னெடுப்புக்குமுரிய வித்தாக அமையும்.
இப்பின்னணியில் ‘மாற்றங்களுக்கான சவால்கள்” எனும் தலைப்பிலான ஒரு நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட மேற்படி தலைப்பிலமைந்த ஆய்வு 2002-2004 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகும். கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலுள்ள,  ஆலையடிவேம்பு – பள்ளிக்குடியிருப்பு, ஒலுவில் – திராய்க்கேணி – பாலமுனை – மீன்ஓடைக்கட்டு, சொறிக்கல்முனை – 6ம் குளனி, காரைதீவு – மாளிகைக்;காடு, கல்முனை – கல்முனைக்குடி -சாய்ந்தமருது, ஆறுமுகத்தான் குடியிருப்பு – ஹிதாயத்து நகர், ஐயங்கேணி – ஹிஜ்ரா நகர் – சவுக்கடி மற்றும் றூகம – தளவாய் ஆகிய எல்லைப்புறக்கிராமங்களை உள்ளடக்கிய எட்டு ஆய்வுக்களங்களை உள்ளடக்கியதாக இவ்வாய்வு அமைக்கப்பட்டது.
ஆய்வு நோக்கங்கள்
கல்முனைப்பிரதேசம்
இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் சமுதாய முரண்பாடுகளுக்கான மூலகாரணங்களை சம்பந்தப்பட்ட இருதரப்பினரதும் பார்வைகளுக்கூடாக முன்வைப்பதேயாகும். குறிப்பிட்ட ஆய்வுக்காலப்பகுதியில், கிழக்கில், பாரியளவு நிதியுதவி அளிக்கப்பட்டு செய்யப்பட்ட, பக்கச்சார்பான, அரசியல் நோக்கம் கொண்ட, காணிப்பிரச்சினை தொடர்பான அறிக்கைகள் பல ஒவ்வொரு சமூகத்திலும் வெளியிடப்பட்டன. இந்தவகையில் பக்கசார்பற்ற, இருசமூகத்தினதும் உணர்வுகளையும் துயரங்களையும், கரிசனைகளையும் பிரதிபலிக்கின்ற, விஞ்ஞான பூர்வமாகச் செய்யபட்ட ஆய்வு ஒன்று அவசியமாகிற்று. இதன் அடிப்படையுpல் ஒவ்வொரு களத்திலும் இரு சமூகங்களையும் சேர்ந்த களஆய்வாளர்கள் பல கட்டங்களாக இவ்வாய்வுகளை மேற்கொண்டனர். பல்வேறு வகையில் தரவுகள் சேகரிக்கப்பட்டு இரு சமூகத்தினருடனும் பல கலந்துரையாடல்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யபட்டது. இவ்வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட பங்குபற்றுனர்களின் பங்களிப்பு பெறப்பட்டுள்ளது.
இக்கட்டுரை அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை-கல்முனைக்குடி-சாய்ந்தமருது களஆய்வு முடிவுகளை முன்வைக்கின்றது. இந்த ஆய்வுக்களத்தில், 1967ல் நிகழ்ந்த சமுதாய மோதல் பற்றிய ;விளங்கங்கள்’, பிற்காலத்தில் 1991ல் இடம்பெற்ற வடக்கு முஸ்லீங்களின் வெளியேற்றத்திற்கும்;, 1994 இன் பின் முஸ்லீங்களுக்கு எதிராக, ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்குமான முக்கியமான நியாயப்படுத்தல்களாக முன்வைக்கப்பட்டது.  இந்தவகையில், குறிப்பாக இந்தக் களஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.
கல்முனைப்பிரதேசம்
கல்முனைப்பிரதேசத்தின் இனத்துவ-நில எல்லைகளும் கொந்தளிப்பின் தளங்களும கல்முனைப்பிரதேசம் ஏறக்குறைய ஒன்றரைக் கிலோமீற்றர் நீள-அகலத்தில் தொடர்ச்சியான கரையோரக் கிராமங்களைக் கொண்ட பட்டி போன்று அமைந்த நிலப்பரப்பாகும். இது வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச்சேல்லும் போது – நீலாவணை (தமிழ்), மருதமுனை (முஸ்லிம்), பாண்டிருப்பு (தமிழ்);, கல்முனைப்படடினம் (தமிழ்-முஸ்லிம்), கல்முனைக்குடி (முஸ்லிம்), சாய்ந்தமருது (முஸ்லிம்) ஆகிய கிராமங்களைக் கொண்டது.
கல்முனைப்பிரதேசத்தின் இனத்துவ-நில எல்லைகளும் கொந்தளிப்பின் தளங்களும்
மேற்குறித்த வரைபடம் கல்முனைப் பிரதேசத்தின் இனத்துவ-நில எல்லைகளையும்; சமுதாயக் கொந்தளிப்பின் தளங்களையும் (Ethno-geo boundaries), கடலும் வயலும் சூழ்ந்த மட்டுப்படுத்தப்பட்ட காணிநில நிலமைகளையும் தெளிவாகக்காட்டுகின்றது. கல்முனை நகர்ப்பகுதி இரு இனங்குழுமங்களுக்குரிய கிராமங்களுக்கு இடையில் அமைந்திருக்கிறது.
கல்முனை களம்: நில அமைப்பும் மக்கள் பரம்பலும் இக்கட்டுihயின் நோக்கம் கருதி, கல்முனைக்களம் என்பது வரைபடத்தில் தொடர்ச்சியற்ற கோடுகளால் எல்லையிட்டுக் காட்டப்பட்டுள்ள பகுதியை மாத்திரம் குறிக்கின்றது. இது கல்முனைப்பட்டினம் (தற்போது மாநகரம்), கல்முனைக்குடி, சாய்ந்தமருதின் ஒரு பகுதியையும் குறிக்கிறது. கல்முனைப் பட்டினம் கிழக்கு மாகாணத்தின் தெற்கில் அமைந்துள்ள பாரம்பரியமான ஆரம்ப கால வர்த்தகக் குடியேற்றங்களில் ஒன்றாகும். பிரதானமாக இப்பட்டினப்பகுதி வர்த்தகக் கடைத்தொகுதியைக் கொண்டிருந்தது. அவ்வேளையில், தென்புறத்தில் சாய்ந்தமருதில் முஸ்லிம் குடியிருப்புக்களும், கல்முனைப்பட்டினத்திலும் அதன் வட, மேற்கு பகுதியிலும் தமிழ்மக்கள் குடியிருப்புக்களும் பாரம்பரியமாக அமைந்திருந்தன. எனினும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இருந்து சாய்ந்தமருது மக்கள் கல்முனைக்குடியில் (பட்டினத்தின் தென்பகுதியில்) குடியேறினர். எனினும் சாய்ந்தமருதுஃகல்முனைக்குடி எல்லைப்புறத்தில் இரு கிராமசேவகர் பிரிவுகளில் தமிழ்க் குடியிருப்புகள் இருந்தன.
குறிப்பாக தமிழ் சமூகத்தின் சாதிய அமைக்குள் ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ எனக் கருதப்பட்ட பிரிவினர்கள்; இங்கு வாழ்ந்தனர். இவர்கள் இவ்விரு கிராம மக்களிடையே பல்வேறுபட்ட தொழில்களை புரிபவர்களாக இருந்தனர். சலவை, தங்கவேலை, பறையடித்தல், மரமேறுதல், வனைதல் போன்ற தொழில்களை புரியும் ஐந்து பிரிவினர்கள் இங்கிருந்தனர். இவர்கள், தொழில் வாய்ப்புக்கும் வருமானமீட்டலுக்கும் முஸ்லிம் மக்களிலே தங்கி வாழ்ந்தனர். கல்முனைக்குடியின் வடபுலத்திலும் கல்முனையின் வர்த்தக பிரதேசத்திலும் ஓரளவு கற்றறிந்த,  ‘மேன்குடி தமிழ் மக்களும்’ வாழ்ந்தனர்.
முரண்பாடுகளும் இன்றைய நிலையும் மேற்குறிப்பிட்ட கல்முனைக் களத்தில் 1950 இற்கும் 2002 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குறைந்த பட்சம் பத்து கலவரங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது (1953இ 1956, 1962இ 1967, 1985இ 1987இ 1989இ 1990;, 1994, 1997, மற்றும் 2000). 1953ம் ஆண்டு கல்முனைப் பட்டினத்தின் கிழக்குப் பகுதியிலிருந்த அரச காணியில் சிங்கள மக்களை குடியேற்றுவதற்கு அரசாங்கம் எத்தனித்தது. இது கல்முனை வர்த்தக பிரதேசத்தின் கிழக்குப் பகுதியிலும் தமிழ் முஸ்லிம் குடியிருப்புகளுக்கு இடையிலும் மேற்கொள்ளப்பட்டதால முதலில் முஸ்லிம் மக்களின் எதிர்ப்புக்குள்ளாகியது. அரசியல் செல்வாக்குடன் இம்முயற்சி தவிர்க்கப்பட்டது.
இந்தக் முஸ்லிம்-சிங்களக் கலவரத்தில் சிங்களக் குடியிருப்பாளர்கள் தாக்கப்பட்டு குடியிருப்புக்கள் எரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இதற்கு தமிழ் மக்களின் ஒத்தாசையும் இருந்தது. பின்னர் இந்த அரச காணிகள் அந்த காலத்திலிருந்த அரசியல்வாதிகளால் அபகரிக்கப்பட்டதுடன் (தங்களுக்குத் தாங்களே உறுதி அனுமதிப் பத்திரங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது) ஏழை முஸ்லிம் மக்களுக்கு குறைந்த விலைக்கு விற்கப்பட்டு அனுமதிப் பத்திரங்கள் முடித்துக் கொடுக்கப்பட்டன. சனப்பெருக்கம் காரணமாக இரு சமூகத்தினையும் சேர்ந்த வறிய மக்கள் (பெரும்பாலும்) இவ்விடங்களுக்குச் சென்று குடியேறினர். இவற்றில் சில காணிகளை தமிழ் மக்களும் முஸ்லிம் சமூகத்தில் பிரபலமானவர்களும் பெற்றுக்கொண்டனர். முஸ்லிம்கள் பின்னர் தமிழர்களிடம் இருந்த  காணிகளையும் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டனர்.
1960இன் முற்பகுதியில், இப்பகுதியில் சிங்கள மக்களும் அரசால் காணிஉரிமை வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டனர். 400 குடும்பங்கள் வரை குடியேற்றப்பட்டு மீன்பிடி வள்ளங்கள், படகுகள் அரசால் அவர்களுக்கு வழங்கப்பட்டது.  இந்த இடத்தில் சிங்களப் பாடசாலை ஒன்றும், பௌத்த விகாரை ஒன்றும் நிறுவப்பட்டு, விகாரைக்குச்; சொந்தமாக பல ஏக்கர் காணியும் அரசால் ஒதுக்கப்பட்டிருந்தது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஏனைய சிங்கள் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு விடுதிகள் அமைக்கப்பட்டு சிங்களக் கிராமமாக மாற்றப்பட்டது. எனினும் இந்நிலப் பரப்புகளில் சிலவற்றிற்கு அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரம் இருந்தது. இதே காலப்பகுதிகளில், அதாவது 53ம்-54ம் ஆண்டு, 60-67ம் ஆண்டுகளில் அம்பாறை, சவளக்கடை, மல்வத்தை, பொத்துவில் போன்ற பிரதேசங்களிலும் சிங்களக் குடியேற்றங்களை அரசு துரிதமாக மேற்கொண்டது. மிக்க நெருக்கமான கிராம அமைப்புக்களில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் அவரவரவர் கிராமங்களிலுள்ள அரச காணிகள் தமக்குரியது என்று நினைத்திருந்தனர். அக்காணிகளில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டதால், சிங்கள மக்களை எதிரிகளாகவே தொடர்ச்சியாக நோக்கினர். முஸ்லிம்களாலும் தமிழர்களாலும் குடியேற்றம் எதிர்க்கப்பட்ட போதிலும் அரச அதிகாரத்தின் மூலமும் தொடர்ச்சியான அரசுகளின் ஆதரவினாலும் அவர்கள் குடியேற்றம் நிகழ்ந்தது.
செம்பாட்டு மண்ணைக் கொண்ட இத்தாழ்நிலப்பகுதி கிறவல்குழி என அழைக்கப்ட்டது. கடற்கரைப் பக்கமாக உள்ள ஒரு பெரிய தென்னந் தோட்டத்திற்கும் சிங்கள மக்கள் உரிமை உடையவர்களாக இருந்தனர். இதனால் மீண்டும் மோதலாக வெடித்தது. பின்னர் சமாதானமாகத் தீர்க்கப்பட்டது என்றாலும் சில சிங்கள மக்கள் காணிகளை கைமாற்றம் செய்துகொண்டு, முதலாளிகள், வசதி படைத்தோருக்கு விற்றுவிட்டு வெளியேறினர். ஆயுத இயக்கங்களின் எழுச்சியின் பின் 1985இல் மிஞ்சியிருந்த சிங்கள மக்களும் அவர்களுடைய தமிழ் பரம்பரைகூட துரோகிகளாக நோக்கப்பட்டு தாக்கப்பட்டனர் அல்லது அழிக்கப்பட்னர்.
இதனிடையில் கல்லோயாத் திட்டங்களின் கீழ் குடியமர்த்தப்பட்ட தமிழ் மக்கள், 1956இன் நாடு தழுவிய கலவரத்தில் திட்டமிட்ட வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு மீண்டும் தத்தமது மரபுரீதியான கிராமங்களுக்கு துரத்தியடிக்கப்பட்டனர். இவ்வாறு மீண்டும் தங்கள் தாயதிக் கிராமங்களுக்கு வந்தவர்கள்  இங்கு குடியேற்றப்பட்டிருந்த சிங்கள மக்கள் மீதும், விலை கொடுத்து வாங்கி குடியேறியருந்த முஸ்லிம் மக்கள் மீதும் விரோதம் கொண்டனர். இதனால் அங்கு வாழ்ந்த முஸ்லிம் மக்களை சமூகச் செல்வாக்குள்ளோர் இரவோடிரவாக அடித்துத் துன்புறுத்தி வீடுகளைக் கொழுத்தி வெளியேற்றினர். அடுத்த நாள் முழுவதும் பொலிஸ் கண்டுகொள்ளவில்லை. இவை இடம்பெறும்போது, ஏமாற்றி ஏழைகளுக்கு காணிகளை விற்ற அரசியல்வாதிகளும் அங்கு வந்து கை கொடுக்கவில்லை. இந்த வன்முறையின் பின்னர் தமிழ் மக்கள் மீதான வெறுப்புணர்வு முஸ்லிம் மக்களுக்குத் தொடர்ச்சியாக இருந்து வந்தது.
1960களின் பின்னர் முஸ்லிம்களின் அரசியல் பலமும் செல்வாக்கும் அதிகரித்தது. அதேவேளை தமிழர் அரசியல் பலமும் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. அக்கால கட்டத்திலிருந்த முஸ்லிம் அரசியல்வாதியும்; அரசியல்வாதிகளால் லாபம் பெற்ற தொகுதி நிர்ணயக் கொமிசனர்களும் ‘இனத்துவ, சாதிய வெறியினால்’ ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் அல்லது தொகுதிக்குள் வாழ்ந்த தமிழ் மக்களை இரண்டு வட்டாரத்திற்குள் அல்லது இரு வேறு தொகுதிகளுக்குள் பிரித்தனர். இதனால் இவர்களால் தமது சமூகத்தைச்சார்ந்த ஒரு அங்கத்தவரையும் எந்த மட்டத்திலும் தெரிவுசெய்ய முடியவில்லை. அதேவேளை தோல்வி அடையும் உறுப்பினர்கள் தமது கோபத்தை இதே மக்கள் மீது செலுத்தினர். இதனால் தமிழ் மக்களிடையேயும் முரண்பாடுகளும், விரோதங்களும், மோதல்களும் இடம்பெற்றன. இதே நேரத்தில் வன்முறைகள் வௌ;வேறு தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் வரும்போது, அது முஸ்லிம்-தமிழ் வன்முறையாக இதே அரசியல்வாதிகளால் அவ்வப்போது தூண்டப்பட்டு கலகங்கள் விளைவிக்கப்பட்டன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த இடங்களில் வர்த்தகமும், பாடசாலைகள், வைத்தியசாலைகள், வீதிகள் உட்பட அடிப்படை உள்ளகக் கட்டமைப்புகள் அபிவிருத்தியடையத் தொடங்கின. அதே சமயம் இவை தமிழ் பகுதியில் இவை வீழ்ச்சியடையத் தொடங்கின.
1967ம் ஆண்டு கல்முனையில் ஒரு இடை தேர்தல் நடை பெற்றது. அதில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி போட்டியிட்டு வெற்றி அடைந்தார். அக்கட்சித்தவையர் தேர்தல் பிரசாரத்திற்காக வந்திருந்த போது ஐக்கிய தேசியக்கட்சி வேடபாளரின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார்.  மேலும் தோல்வி அடைந்த அவ்வேட்பாளரின் ஆதரவாளர்கள் கல்முனைக்குடி-சாய்ந்தமருது எல்லைக்குள் சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தங்கி வாழ்ந்த வலுவற்ற தமிழ் மக்கள் (அவர்கள் ஒட்டு மொத்தமான வாக்களிப்பே வெற்றிக்கு காரணமாக அமைந்தது) மீது இவ்வன்முறையை திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விட்டனர். அவர்களின் வாழிடங்களைத் தீயிட்டு விரட்டியடிக்கப்பட்டனர். அம்மக்கள் மீதான அடாவடித்தனம் இனத்துவ விரோதமாக உருமாற்றம் அடைந்தது.
கலவரத்தின்போது வெளியேற்றப்பட்ட இம்மக்கள் நீண்ட காலமாக இடம்பெயர் வாழ்வில் அல்லலுற்றனர்.
சமூகத்தின் கீழ்மட்டத்தில் வாழ்ந்த இவர்களில் இன்றும் சிலர் பரம்பரை பரம்பரையாக நிலமற்றவர்களாகவுள்ளனர். இதேவேளையில் கல்முனைக்குடியின் வடக்கு எல்லையில் வாழ்ந்த தமிழ் மக்களும் தாக்கப்பட்னர். அதேவேளையில் மீளக்குடியமர்வு தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்ட காழ்ப்புணர்வுகளாலும் பாதுகாப்பின்மையாலும் சாத்தியமற்றதாகியது. குறைந்த சந்தைப் பெறுமானத்தில் நிலங்கள் முஸ்லிம் வியாபாரிகளுக்கு விற்கப்பட்டன. குல்முகை;கடி-சாய்ந்தமுரது எல்லைப்புறத்திலிருந்த ஐந்து கோயில் ஆதீனங்களும் அரச பாடசாலை ஒன்றும் முஸ்லிம்களிடம் கைமாறின. கோயில்; ஆதீனங்கள் குறிப்பிட்ட குருக்களால் முஸ்லிம்களுக்கு விற்கப்பட்டுள்ளன. அதை வாங்கியோர் கோயில் இருந்த இடங்களில் பள்ளிவாசல்களை அமைத்துள்ளனர். அரச பாடசாலை முஸ்லிம் பெண்கள் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அரசியல் பலமிழந்து போகையில் தமிழ் சமூகத்தின் வளர்ச்சியும் அபிவிருத்தியும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தது. மேலும் உக்கிரமான இடப்பெயர்வு, நிலப் பிரச்சினைகளின் தொடர்ச்சியாக, அடுத்து வந்த பரம்பரையில் முஸ்லீங்கள் மீதான தமிழ் மக்களின் வெறுப்பும் பழிவாங்கல் உணர்வும் உக்கிரமடைந்தது.
1985ம் ஆண்டில் வடக்கு கிழக்கு ப+ராகவும் வெடித்த இனமோதல்கள் முஸ்லிம்-தமிழ் கொந்தளிப்புகளையும் உருவாக்கியது. ஆயுத இயக்கப்பலம் பழிவாங்கும் உணர்வுக்கு உந்துதலும் ஆதரவும் அழித்தது. இந்தக் காலகட்டத்தில் முஸ்லிம்கள் பட்டினத்தின் கிழக்கில் சிங்கள குடியேற்றப் பிரச்சினை தோன்றிய இடங்களில் தத்தமக்குரிய காணிகளில் குடியேறினர். சில காணிகள் அனுமதிப்பத்திரமுள்ளவை, பேருமளவு காணிகள் விலைக்கு வாங்கப்பட்டவை. அதேவேளை கல்முனை ஃ கல்முனைக்குடி எல்லைப்பகுதிகளிலும் வர்த்தக சமூகங்கள் குடியேறி இருந்தனர். தொடர்ச்சியான பழிவாங்கல் இனமோதல்களில் (1985, 1987, 1989, 1990, 1994, 1997 ஆண்டுகளில்) வாழிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டு, வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். ஒவ்வோரு கலவரத்திலும் கல்முனைப் பட்டினத்திலிருந்த வர்த்தக நிறுவனங்கள், கடைகள், சந்தைகள் போன்றவைகளும் கொள்ளையடிக்கப்பட்டபின் தீக்கிரையாக்கப்பட்டன. பெருமளவிலான பொருட்சேதங்கள் ஏற்பட்டன. இதனால் குறிப்பாக 1990ம் ஆண்டிற்குப் பிறகு பாரிய முஸ்லிம் மக்கள் இடப்பெயர்வு ஏற்பட்டது. இதுவரை மீள்குடியமர்வு இடம்பெறவில்லை. சில காணிகள் தமிழ் மக்களிற்கு குறைந்த விலையில் விற்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்களின் துயரப்பார்வைகள்
தமிழ் மக்கள் பின்வரும் விடயஙகள் குறித்து தங்கள் கரிசனைகளையும் ஆதங்கங்களையும் அதிருப்தியையும் கொண்டிருக்கின்றனர். சாதிய ரீதியான அடக்குமுறையும் அதன் விளைவான தாக்கங்களும், அரசியல் பலமற்ற நிலை, நிலப்பிரச்சினை, அபிவிருத்தியில் ஓரங்கட்டநிலையும் புறக்கணிப்பும், பொருளாதார வளப்பகிர்வில் பாரபட்சம், உழைப்புச் சுரண்டல், மக்கள் பலமிழப்பு (இளைஞர்கள் இழப்புக்கள்), அமைதியின்மை, பீதியுடன் வாழ்தல் போன்றன அவர்களுக்கு சமூகரீதியாகவும் உளரீதியாகவும் பின்னடைவுகளை தோற்றுவித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.
சாதிவெறி பிடித்தவர்களாலும் முஸ்லிம் அரசியல்வாதிகளாலும் பணச்செல்வாக்குடையவர்களாலும் தமிழ் மக்கள் உள்ளும் வெளியும் பிரித்தாளப்பட்டனர். சமூகத்தால் தாழ்த்த்ப்பட்ட மக்களின் நிலப்பற்றாக்குறையை ‘உயர்’ நிலையிலிருந்தோர்  நிலையில் கவனத்திற் கொள்ளவேயில்லை. அவர்களின் ஆரகாமையில் இருந்த அரச நிலங்களில் கூட வாழ அனுமதிக்கவில்லை. அரசுக்கு எவ்வளவு முறைப்பாடு கொடுத்தும் எதுவும் நடைபெறவில்லை. கல்முனைக்குடி கடற்கரை பள்ளிவாசலுக்கு வடக்குப் பக்கமாகவுள்ள கல்முனை கடற்கரை கண்ணகியம்மன் கோயிலுக்கு முன்பாக இருந்த காணி முன்னர் மலம் புதைக்குமிடமாக இருந்தது. மலம் புதைக்குமிடம் வேறு இடத்திற்கு பலாத்காரமாக மாற்றப்பட்டு இது மக்களின் குடியிருப்பு நிலமாக மாற்றப்பட்டது. கோயில் ஆதீனமாக இருந்த நிலம் காணியற்ற தமிழ் மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் ஒரு கோயில்-பள்ளிவாசல் எல்லை விவகாரத்தில் அரசியல் தலையீடு ஏற்பட்ட வேளையில் (1950) அரசியல்வாதிகளை விடுத்து மதத் தலைமைகள் தலையிட்டு சமாதானமாக தீர்த்து வைத்த சம்பவம் முன்னர் சமாதான நிலைமைக்குச் சான்றாகும்.
மேலும் வர்ததகப் போட்டியுடையோர் முஸ்லிங்கள் மீதான பழிவாங்கல் மற்றும் காழ்ப்புணர்வை இளைஞர்களுக்கு ஊட்டினர். இது தமிழ்மக்களின் ஒன்றிணைப்பைக் குலைத்ததோடு முஸ்லிம் மக்களுடன் மோதலையும் ஏற்படுத்தியது. பெரும்பான்மையுடனான பிரச்சினைகளால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டதால் ஆரம்ப காலங்களிலிருந்தே அரசியல் பலத்தையும் இழந்தனர். இன மோதல்களையும் அதன் பாற்பட்ட இடப்பெயர்வுகளையும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் பெரும் தனவந்தர்களும் பயன்படுத்தினர். காணிநிலங்களைக் கைப்பற்றுவதற்காக தமிழர்களை அவர்களது பிரதேசங்களில் இருந்து குடி எழுப்பவேண்டும் என நன்கு திட்டமிட்டு செயற்படுத்தினர். காலக்கிரமத்தில் அவர்கள் சிறிதுசிறிதாக இடம்பெயர்ந்து, கரைவாகுப்பற்றிலுள்ள பாண்டிருப்பு, நீலாவணை, பட்டித்திடல், கந்தளாய், அக்கரைப்பற்று போன்ற ஊர்களுக்குச் சென்று குடியேறினர். இதானால் முஸ்லிம்கள், தமிழர்களின் நிலங்கள், கோயில்கள், நெற்காணிகள், கடைகள் போன்றவற்றையும் வாங்கிக்கொண்டனர்.
1967ம் ஆண்டு இடைத்தேர்தலின் போது தமிழ் கட்சி சார்ந்து போட்டியிட்ட வேட்பாளருக்கு ஆதரவாக பேச வந்த அவர்கள் தலைவரை மாற்றுக்கட்சி அரசியல்வாதிகளின் குண்டர்கள் தாக்கினர். இது தமிழ் மக்கள் மனதில் ஆழமான வெறுப்புணர்வையும் விரோதத்தையும் தோற்றுவித்தது. தமிழ் மக்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளினது உள்நோக்கத்தினை புரிந்துகொண்டனர். எனினும் பின்னர் இதனை இனரீதியான காழ்ப்புணர்வாக ஃ பகைமையுணர்வாகவே விளங்கிக் கொண்டனர், பார்க்கவும் தொடங்கினர்.
கல்முனை புதிய சந்தைத்தொகுதியில் தமிழ்மக்களுக்கு குறைந்த எண்ணிக்கையான கடைகளே வழங்கப்பட்டன. நிரந்தரமான பெரும் வர்த்தகர்கள் தமிழ் சமூகத்தில் குறைவாக உள்ளனர். தினமும் பொருட்களை வாங்கி விற்பவர்கள் முஸ்லிம் வர்த்தகர்களில் பெருமளவு தங்கியுள்ளனர். இவர்கள் காலையில் அவர்களிடம் கடன்பட்டு மாலையில் பெரும் வட்டியுடன் செலுத்துகின்றனர். இது தமிழ் மக்களிற்கு கீழ்மட்ட வருமானத்திற.கு மட்டுமே இடமளிக்கிறது. பிற்காலங்களில் முஸ்லீங்கள் இராணுவத்தின் ஆதரவுடன் கிழக்கின் வேறு இடங்களிலுள்ள தமிழ்மக்களை தாக்கினர். இதுவும் அவர்கள் மீதான ஆயுதக்குழுக்களின் உக்கிரமான தாக்குதலுக்கு காரணமாயிற்று. கல்மனையின் முனைப்பகுதியில் ஏற்பட்ட தொடர்ச்சியான கடல் அரிப்பினால் கரையோர நிலத்தில் பெரும்பகுதியும் கடலுக்குள் சென்றுவிட்டன. இந்நிலையில் காணிப்பிரச்சினை மிகவும் உக்கிரமானதாகியது.
முஸ்லிம் மக்களின் துயரப்பார்வை
அரசியல்வாதிகளால் ஏமாற்றறப்படல், தமிழ்மக்களாலும் ஆயுதக்குழுக்களாலும் நிலப்பறிப்பு, வயற்காணிகளுக்கு செல்லமுடியாது தடுக்கப்பட்டமை, விளைச்சல்கள் அபகரிக்கப்பட்டமை அல்லது எரிக்கப்பட்டமை, பொருளாதார வளங்கள் கொள்ளையிடப்படல், ஆயத வன்முறையும் அடக்குமுறையும், வழிப்பறி, கொலை, கொள்ளை, கப்பம் அறவிடல், ஊழல்கள் அதிகரித்தல் போன்ற அவர்களது கரிசனைக்கரிய விடயங்களாக உள்ளன. அமைதியின்மை, பீதியுடன் வாழ்தல், உயிராபத்துக்கள தமிழ் மக்கள் பின்வரும் விடயஙகள் குறித்தும் ஆதங்கங்களையும் அதிருப்தியையும் கொண்டிருக்கின்றனர்.
முஸ்லிங்கள் தாக்கப்பட்டு துரத்தியடிக்கப்பட்டனர். 1987ம், 88ம் ஆண்டுகளில் தமிழ்-முஸ்லிம் கலவரங்கள் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டிருக்கும்போது தமிழ்மக்களின் முறைப்பாடு ஒன்று இந்திய ராணுவ உயர்அதிகாரியிடம் கொடுக்கப்பட்டது. அவர் இந்தப் பிணக்கைத் தீர்ப்பதற்கு கல்முனைக்கு வந்திருந்தார். கல்முனையில் தமிழர்களின் நிலங்களை முஸ்லிம்கள் பிடித்துக் கொண்டதாக தமிழ் மக்கள் குற்றம் சாட்டினர். இதன்போது தமிழர் இவை பலாத்காரமாக அல்லது நிர்ப்பந்தத்தின் பேரில் விற்கப்பட்டது என்று கூறினர். முஸ்லிம்கள் பணம் கொடுத்து வாங்கியதற்கு சாட்சிகளை முன்வைத்தனர். இது இருபக்கத்திலும் இருந்த பெரியோர்கள், கோயில் ஆதீனத்தார்கள், பள்ளிவாசல் பரிபாலனசபை போன்றோரால் கலந்துரையாடப்பட்டு விளக்;கிக் கொள்ளப்பட்டது. இதன் பிறகு, இந்த விடயம் எப்படிக் கையாளப்பட்டபோதும் தற்போதைய உரிமை முஸ்லிம் மக்களுக்கு என்பது விளங்கிக் கொள்ளப்பட்டது என அவர்கள் குறிப்பிடுகின்றனர். காணிகள் விற்றவர்களில் அநேகர் குடிப்பழக்கம் கொண்டவர்கள். அத்துடன் இடப்பெயர்வின்போது அவர்கள் வேறு இடங்களில் காணிகளை வாங்குவதற்கும் காசு தேவைப்பட்டதால் அவர்களுடன் நல்லுறவிலிருந்த முஸ்லிம்களுக்கு அவர்களுடைய சட்டத்தரணி முன்னிலையில் விற்றனர் எனவும் குறிப்பிடப்பட்டது.
எனினும், ஆயுதபலம் வந்ததால் முஸ்லிம் மக்கள் ஒவ்வொரு கணமும் அச்சுறுத்தப்பட்டவர்களாகவே உள்ளனர். பொருள்ரீதியாகவும் உடல்ரீதியாகவும் நடமாட்டத்திற்கும் பாதுகாப்பு நிலைமை இல்லை. மேலும் இயக்கங்களின் ஆரம்பகாலங்களில் குறிப்பாக 1985-1997வரை, ஆட்கடத்தல், கப்பம் கேட்டல், வாகனப் பறிப்பு, கொள்ளை, கள்ளமரம் கடத்தல், ஆயுதம் விற்றல்-வாங்குதல் போன்றவற்றில் இயக்கங்கள் ஈடுபட்டன. இதனால் முஸ்லிம் மக்களுக்கு பெரும் பொருள் சேதங்களும் ஆட்சேதங்களும் ஏற்பட்டன. மேலும் வன்முறை ஆயுதக் கலாச்சாரமும் ஊழல் வியாபாரங்களும் முஸ்லிம் சமூகத்துக்குள்ளும் பரவியதால் முஸ்லிம் சமூகத்திற்குள்ளும் மோதல்கள், பிரச்சினகள் தாக்கங்கள் ஏற்படவும் அது வழிகோலி இருக்கின்றது.
முரண்பாடுகளுக்கான மூலகாரணங்கள்
கல்முனை முரண்பாடுகளுக்கான முலகாரணங்களாக பின்வரவனவற்றை தொகுத்த நோக்கலாம். அரசியல் அதிகார துஷ்பிரயோகங்கள், கட்டமைக்கப்பட்ட வெறுப்பு, விரோத உணர்வுகள், ஊழல்கள், பொருளாதாரப் பிரச்சினைகள், முதலாளித்துவச் சுரண்டல் நிலைகள், நிலப் பற்றாக்குறை, காணி உரிமைப் பிரச்சினைகள், அரசியல் அதிகாரமின்மை, ஆயத வன்முறைகளும் அடாவடித்தனங்களும், வளப்பகிர்வில் பாரபட்சங்;கள் (நிலம், பொரளாதார வளங்கள், நீர், வடிகால் வளங்கள்) மற்றும் சாதியக் கண்ணோட்டங்கள் போன்றன.
1953ல் அரச குடியேற்ற முயற்சி முதன்முறையாக இனங்களிடையே மோதலைத் தோற்றுவித்தது. குறிப்பாக, நிலமற்ற மக்கள் குறிப்பிட்ட பிரதேசத்தில் இருக்கும்போதும் மட்டப்படுத்தப்பட் நிலப்பரப்பு காணப்படுகின்ற நிலமையில்; அவர்களுக்கு அனுமதிப்பத்திரங்காது வழங்காது, திட்டமிட்ட வகையில் வெளியிடங்களில் இருந்த சிங்கள மக்களைக் குடியேற்ற முயன்றதன் காரணமாக இம்மோதல் ஏற்பட்டது. இக்குடியேற்ற முயற்சி தடுக்கப்பட்டபோதும், அக்கால அரசியல்வாதிகளும் மேல்நிலை அரச ஊழியர்களும் இதனைச் சாதகமாக்கி காணிநிலங்களைத் தமது பெயரில் மாற்றினர் அல்லது நிலத்திற்கான உரிமையையை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்து ஏழை மக்களிடம் பணம்பெற்றுக்கொண்டு விற்றனர். 1967ல் அரசியல் வன்முறையாளர்கள் அரசியல லாபம் கருதி பிரச்சினையான நிலைமைகளில் இனத்துவேசத்தினைக் கிளறிவிட்டு அதில் இலாபமடைய முயன்றனர். மேலும் தேர்தலுக்குப் பின்னால் அரசியல் பழிவாங்கல்களாகவும் இது மாறியிருந்தது. இங்க வாழ்ந்த தமிழ்மக்கள் முற்றாக அந்நிலங்களையும் வாழ்வையும் இழந்தனர்.
1985-1997: அரசியல்மயப்படுத்தப்பட்ட மரபுரீதியான நிலம்பற்றிய நோக்குகளும் இடப்பெயர்வு ஏற்படுத்திய தாக்கங்களும் முக்கியமாக ஆயுத பலம் பெற்ற போது பழிவாங்கல், பொருளாதார பலத்தை வீழ்த்துதல், நிலத்தைக் கைப்பற்றுதலாக மாறியது. புழி வாங்கலாக பாரியளவு இடப்பெயர்வு நிலைமைகள் இழப்பு நிலைமைகளை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்துதலாக அமைந்தது. கிழக்கின் தமிழ், முஸ்லிங்களிடையேயான இனமுரண்பாடுகளுக்கான பிரதான மூலகாரணங்காளவும் அடிப்படை சமுதாயங்களிடையே சமாதானத்தைக் கட்டமைப்பதற்கு இன்று பிரதானமாகவுள்ள சவால்களாக அரசியல் துஷ்பிரயோகங்கள், கட்டமைக்கப்பட்ட வெறுப்பு, விரோத உணர்வுகள், நிலப்பிரச்சினை போன்றவற்றை இனங்காணலாம்.
SHARE