யூனிஸ்கான் மிரண்டு போனர் குட்டையை கிளப்பி விட்ட விஷமிகள்…

397
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் திணறி வரும் பாகிஸ்தானின் மூத்த வீரர் யூனிஸ்கான் ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் யூனிஸ்கானின் பெயரில் டிவிட்டரில் பரபரப்பான தகவல் ஒன்று வெளியானது.

உலகக்கிண்ண போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், டெஸ்டில் தொடர்ந்து ஆடுவேன் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த தகவலை 37 வயதான யூனிஸ்கான் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘டிவிட்டரில் எனக்கு கணக்கு எதுவும் கிடையாது. நான் ஓய்வு பெறுவதாக வெளியான செய்தி போலியானது. துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயல்பட நான் கடுமையாக உழைத்து வருகிறேன். ஓய்வு குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

SHARE