இந்திய கிரிக்கெட் வாரியம் கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளி என்று தெரிவித்துள்ளது…

361
மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.உலகக்கிண்ண கிரிக்கெட்டில் கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலாக இரட்டை சதம் விளாசியவர் கிறிஸ் கெய்ல்.

அவரது முன்னோர்கள் இந்தியர்களே என நிரூபிக்க இந்திய கிரிக்கெட் வாரியமும் மத்திய அரசும் திட்டமிட்டுள்ளது, இதற்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இது கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்கும் சான்றுகளை சேகரிக்கும்.

இது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் கூறுகையில், கெய்லின் முன்னோர்கள் பல தலைமுறைகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் கால ஆதிக்கத்தில் இருந்த மேற்கிந்திய தீவுகளில் குடியேறியவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சதம் அடிக்கும் போதும் விக்கெட் விழ்த்தும் போதும் கெயில் ஆடும் நடனம் பாங்க்ரா ஒத்து இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாது கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ள ராபின் சிங், மற்ற விடயங்களை விவரிக்க மறுத்துவிட்டார்.

இதனிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கெய்லின் முன்னோர்கள் இந்தியர்களே என்றும் அவரது உண்மையான பெயர் சேதன் கோயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியர்களால் மட்டுமே இரட்டை சதம் அடிக்க முடியும் என ரசிகர்கள் கருதியதற்கு மாறாக கிறிஸ் கெயில் இந்த இரட்டை சத சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE