மக்களின் ஆணையை புறந்தள்ள முடியாது எனவும் மக்களின் ஆணைக்கு இணங்க மறுத்தால் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலுக்கு செல்ல வேண்டியேற்படும்

385

 

நிறைவேற்று அதிகாரம் சம்பந்தமான விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு தேசிய நிறைவேற்றுச் சபையின் பொது நிலைப்பாட்டுக்கு எதிராக இருக்குமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
0366

தேசிய நிறைவேற்றுச் சபை நேற்று கூடிய சந்தர்ப்பத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை சம்பந்தமான விடயங்களை கலந்துரையாடிய போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொது நிலைப்பாட்டுக்கு எதிரான யோசனையை முன்வைத்துடன் 19வது திருத்தச் சட்டம் மூலம் 17வது திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பான கருத்துக்களை முன்வைத்தது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்துச் செய்ய தேசிய நிறைவேற்றுச் சபை தீர்மானித்துள்ள போதிலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்தில் மாத்திரம் அந்த அதிகாரங்களில் ஓரளவு அதிகாரங்களை அவருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அவரது பதவிக்காலத்தின் பின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றாக ஒழித்து புதிய தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என தேசிய நிறைவேற்றுச் சபை பொது நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதற்கு இணங்கவில்லை என்றால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்கும் திருத்தம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் நாடாளுமன்றத்தில் அதற்கு இணக்கம் கிடைக்கவில்லை என்றால் அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல போவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் ஆணையை புறந்தள்ள முடியாது எனவும் மக்களின் ஆணைக்கு இணங்க மறுத்தால் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலுக்கு செல்ல வேண்டியேற்படும் எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

SHARE