மறைந்த மாபெரும் இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கிய படம் தான் “தலைமுறைகள்”. இப்படத்தை சசிகுமார் தன் கம்பேனி புரொடக்சன் நிறுவனத்தின் சார்ப்பாக தயாரித்து இருந்தார்.
“இசைஞானி” இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த இப்படம் அணைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டு பெற்றது. இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ள நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தேசிய விருதை, ஜனாதிபதி கையால் பெற்று வந்துள்ளார் தயாரிப்பாளர் சசிகுமார்.
இதை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியது ” எந்த வயதிலையும் படத்தை இயக்கலாம் என்று நிரூபித்து காட்டியவர் பாலுமகேந்திரா அவர்கள் . இதுபோன்ற படங்களை நான் மட்டும் அல்ல, இன்றைய தலைமுறையினரும் எடுக்க முன்வர வேண்டும்.
இதன்மூலம் இந்த தலைமுறையினர், சென்ற தலைமுறையினரை கவுரவிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்” என்றார்.
“இப்படி ஒரு படத்தை தயாரித்த காரணத்திற்காகவே “சினி உலகம்” சசிகுமாரை மனதார பாராட்டுகிறது