வெற்றிக்கு உதவிக்கரம் நீட்டிய மழை: சொல்கிறார் டோனி

671
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மழை வெற்றிக்கு உதவியது என்று சென்னை அணித்தலைவர் டோனி கருத்து தெரிவித்துள்ளார்.ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த டெல்லி டேர்டெவில்சுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6–வது வெற்றியை பதிவு செய்தது.

இதில் 179 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி வெய்ன் சுமித் (79 , 51 பந்து, 4 பவுண்டரி, 8 சிக்சர்), பிரன்டன் மெக்கல்லம் (32 ), சுரேஷ் ரெய்னா (47 ) ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் 2 பந்து மீதம் எட்டிப்பிடித்தது.

வெற்றிக்கு பிறகு சென்னை அணித்தலைவர் டோனி கூறுகையில், ‘நாங்கள் நல்ல விதமான கிரிக்கெட்டை விளையாடியதாக நினைக்கிறேன். இருப்பினும் கடைசி 2–3 ஓவர்களில் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம்.

பந்து வீச்சில் இன்னும் முன்னேற்றம் தேவை. குறிப்பாக பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களில் சிறப்பாக பந்து வீச வேண்டும். ஆட்டத்தின் இடையே அவ்வப்போது பெய்த மழை தூரல்கள் உண்மையிலேயே எங்களுக்கு உதவிகரமாக இருந்தது.

மழை காரணமாக எதிரணி பந்து வீசுவதில் சிரமம் ஏற்பட்டு விட்டது. நான் பார்த்த சிறந்த டெல்லி ஆடுகளங்களில் இதுவும் ஒன்று என கூறியுள்ளார்.

SHARE