கோத்தாவின் கோரத்தாண்டவங்களை மக்கள் மறக்க மாட்டார்கள்

483

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வின் ஜனாதிபதி வேட்பாளராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். யார் இந்த கோத்தபாய ராஜபக்ச என்றால், இலங்கையின் தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்திலுள்ள ஹம்பாந்தோட்டை – வீரகெட்டிய எனும் பகுதியில் 1949ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி அரசியல்வாதியான டி.ஏ.ராஜபக்ச தம்பதியினருக்கு நந்தசேன கோத்தபாய ராஜபக்ச பிறந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ச ஆகி யோரின் சகோதரனாக கோத்தபாய ராஜபக்ச பிறந்தார்.

தனது ஆரம்ப கல்வியை கொழும்பு ஆனந்த கல்லூரி யில் கோத்தபாய ராஜபக்ச பயின்றுள்ளார். 1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி கேடட் அதிகாரியாக இலங்கை ராணுவத்தில் இணைந்து, தனது ராணுவ பயணத்தை கோத்தபாய ராஜபக்ச ஆரம்பித்துள்ளார். அத னைத் தொடர்ந்து, 1972ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி இலங்கை ராணுவத்தின் இரண்டாம் நிலை லெப்டினனாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.

இலங்கை ராணுவத்தின் ஸ்ரீலங்கா சிங்ஹ ரெஜிமென்ட், ரஜரட்ட ரயிபைல்ஸ் ஆகிய படைப் பிரிவுகளில் கடமையாற்றிய அவர், 1983ஆம் ஆண்டு ராணுவத்தின் கஜபா ரெஜிமென்ட்டில் இணைந் துள்ளார். 1983ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் தமிழீழ விடுத லைப் புலிகளுடனான உள்நாட்டு யுத்தம் ஆரம்பித்த காலப் பகுதி யில் இலங்கை ராணுவத்தில் முன்னின்று கோத்தபாய ராஜபக்ச செயற்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, 1992ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தின் பல பிரிவுகளில் கட்டளை தளபதியா கவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

இந்த நிலையில், பாதுகாப்புத் துறையில் பல உயரிய பதவிகளை வகித்த அவர், 1992ஆம் ஆண்டு இலங்கை ராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார். இலங்கை ராணுவத்திலிருந்து 1992ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற கோத்தபாய ராஜபக்ச, அந்த காலப் பகுதியி லேயே அமெரிக்காவிற்கு குடியேறி அமெரிக்க பிரஜை என்கிற உரி மையை பெற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கை மற்றும் அமெரிக்கா என்று இரட்டை பிரஜை உரிமையை பெற்றவராக கோத்தபாய ராஜபக்ச திகழ்ந்தார். தனது சகோதரனான மஹிந்த ராஜபக்ச, 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதன் ஊடாக, அமெரிக்க பிரஜை உரிமையை பெற்ற கோத்தபாய ராஜபக்ச, இலங்கையை நோக்கி மீண்டும் வருகை தந்தார். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ச, அந்த ஆண்டு நவம்பர் மாதம் கோத்தபாய ராஜபக்சவை பாதுகாப்பு செயலா ளராக நியமித்தார். உள்நாட்டு யுத்தம் வலுப் பெற்றிருந்த நிலை யிலேயே கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் பாதுகாப்பு செயலா ளராக நியமிக்கப்படுகின்றார்.

பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்யும் வகையில், கொழும்பு – கொள்ளுபிட்டி பகுதியில் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி கோத்தபாய ராஜபக்ச பயணித்த வாகன தொடரணி மீது, தமிழீழ விடுதலைப் புலிகள் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் கோத்தபாய ராஜபக்ச உயிர் தப்பியிருந்த பின்னணியில், அந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்திருந்ததுடன், 14 பேர் காயமடைந்திருந்தனர். அத னைத் தொடர்ந்து, தமிழீழ விடுத லைப் புலிகளுடன் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை நிறைவு செய்ய கோத்தபாய ராஜபக்ச பாரிய பிரயத்தனத்தை வழங்கியிருந்தார்.

அதேநேரம் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் கொலை செய்யப்பட்டனர். அன்றைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் இணைந்து செய்யப்பட்ட கொலைகளே இவை. கடத்தப்பட்டுக் காணாமல் போனவர்களுக்கும் கோத்தபாயவே பதில் கூறவேண்டும். ஒரு கொலைகாரக் கும்பலில் யாரும் உத்தமர்கள் கிடையாது. அதிக கொலையினை செய்தவர் யார்? குறைந்த கொலையினை செய்தவர் யார்? என்கிற வகையில் சஜித் பிரேமதாசா அவர்களுடைய தந்தையான ரணசிங்க பிரேம தாசா தமிழர்களையும், முஸ்லீம் களையும், சிங்களவர்களையும் கொலை செய்திருக்கின்றார். தென்னிலங்கையில் டயர் போட்டு எரிக்கும் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியவர் ரணசிங்க பிரேமதாசாதான் என்பதை சுட்டிக்காட்டுகிறோம். ஆகவே வடகிழக்கினைப் பொறுத்த வரை தழிம் பேசும் மக்கள் எவரும் கோத்தபாய ராஜபக்ஷவை ஆதரிக்கப்போவதில்லை என்பது நிதர்சனமான உண்மை. ஆனாலும் இவர்களுக்காக பல தமிழ் இளைஞர்கள் இவரது கட்சியுடன் இணைந்து இனப்படுகொலை செய்த கொலைக் குற்றவாளி என்பதைக் கூட கருத்திற்கொள்ளாது இவர்களும் வாக்களித்து, தமிழினத்தை வாக்களிக்கச் சொல்வது என்பது சொந்தச் செலவில் சூனியம் வைப்பதற்குச் சமனானது.

தொடர்ந்தும் கோத்தபாயவின் கோரத் தாண்டவங்களைப் பார்க்கின்ற போது, ஈழப் போரின் போது, இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் 110 தளபதிகளை கொலை செய்ய உத்தரவிட்டதாக கோத்தபாய ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டது. அத்துடன், வெள்ளை வேனில் பலர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கும், கோத்தபாய ராஜபக்சவிற்கும் தொடர்பு காணப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் இரு வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது. ஊடகவியலா ளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமைக்கு, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்து, லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்கவினால் வழக்கொன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது. அதேவேளை இக்கொலைகாரக் கும்பலின் ஆட்சிக் காலப்பகுதியில் 35க்கும் மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்ப வங்களும் பதிவாகியுள்ளது.

அத்துடன் கனடா பிரஜையான ரோய் சமாதானம் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பில் பயங்கரவாத விசா ரனை பிரிவினரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும், 2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டது.

மேலும், தனது தந்தையான டி.ஏ.ராஜபக்சவின் பெயரில் அமைக்கப்பட்ட அருங் காட்சியக நிதியில் மோசடி இடம்பெற்றதாக கூறப்படும் வழக்கொன்றும் கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில் தற்போது விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
ஊடகவியலாளர் கீத் நொயாருக்கு தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலா ளர் கோத்தபாய ராஜபக்சவிடம் குற்ற புலனாய்வு பிரிவு நீண்ட நேரம் விசாரனை மேற்கொண்டது. இதேவேளை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை உட்பட பல கொலைகள் தொடர்பில் சூழ்ச்சி செய்த குற்றச்சாட்டின் கீழ் கோத்தபாய ராஜபக்சவுக்குத் தொடர்பிருப்பதாக சந்தேகங்கள் வலுப்பெற்றிருக்கிறது.

அதில் குறிப்பாக வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட கொலை மற்றும் குடிநீர் கோரி சமாதான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரத்துபஸ்வெல மக்களுக்கு எதிராக இராணுவத்தை ஈடுபடுத்தி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்த சம்பவம் என்பன கோத்தபாயவின் நேரடி தலையீட்டில் மேற் கொள்ளப்பட்டுள்ளன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தராகி என்ற புனைபெ யருடன் ஊடகங்களில் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்திய தர்மரத்தினம் சிவராம் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட நிலையில் பாராளுமன்றத்திற்கு அண்மையில் சடலமாக மீட்கப்பட்டார். 1989ஆம் ஆண்டு ஆங்கிலக் கட்டுரையுடன் தனது ஊடகப்பணியை ஆரம்பித்த தர்மரத்தினம் சிவராம் அத னைத் தொடர்ந்து அரசியல், போரி யல் மற்றும் பாதுகாப்பு நில வரம் தொடர்பான கட்டுரைகள் பலவற்றை தமிழ், ஆங்கில மொழிகளில் வெளியிட்டார். எனி னும் தராகியின் எழுத்தாற்றலுக்கு ஈடுகொடுக்க முடியாத கயவர் களினாலேயே அவரின் உயிர் பறிக்கப்பட்டது என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் திகதி ஊடகவியலாளர் லக்மால் டி சில்வா தெஹிவளையில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் கிறீஸ்பூதம் என்கிற நபர்களின் பின்னணியில் கோத்தபாயவுக்கு நேரடியாகத் தொடர்பிருப்பதாக பலதரப்பட்டவர்களாலும் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. கொலை, கொள்ளை, பாலி யல் வல்லுறவு உள்ளிட்ட குற்றச் செயல்களை புரிந்து விட்டு தலைமறைவாக வாழ்கின்ற குற்றவாளிகளை பொலிஸாரி னால் கைது செய்ய முடியுமாயின் மர்ம நபர்களை மட்டும் ஏன் கைது செய்ய முடியாது? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இவ்வாறான பல சம்பவங்களை மக்கள் இன்னமும் மறந்துவிடவில்லை என்பதை கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். எனினும் இனிவரும் காலத்திலும் தமிழ் மக்களுக்கு எதிராக இவ்வாறான கசப்பான சம்பவங்கள் நடபெறாமலிருக்க தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் காத்திரமானதொரு முடிவினை எடுக்கவேண்டும்.

இரணியன்

SHARE