இந்தியா- இலங்கை அணுசக்தி ஒப்பந்தம்

544

இந்தியா- இலங்கை இடையிலான, விரிவான சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை, நேற்றுடன் முடிவடைந்தது. இலங்கை தலைநகர், கொழும்புவில் நடந்த இரண்டு நாள் பேச்சில், இந்திய வெளியுறவு துறை இணை செயலர் அமன்தீப் சிங் தலைமையில், அணுசக்தி துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இலங்கையின், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி துறை செயலர் தாரா விஜயதிலகே தலைமையில், அந்நாட்டு அணுசக்தி கமிஷன் மற்றும் வெளியுறவு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ‘இரு நாடுகளுக்கு இடையில் நடந்த இந்த பேச்சு, சுமுகமாக முடிந்தது. இரு நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த மாதிரி வடிவம் தயாரிக்கப்பட்டு, அதற்கு, விரைவில், இந்தியாவில் நடக்கவுள்ள கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும்’ என, இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE