ஆவணப்பட தயாரிப்பாளரான செனல்-4 திரைப்பட தயாரிப்பாளர் கெலும் மெக்ரேவே அந்த ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை வழங்குவதற்கு முயற்சித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை கணக்கிலெடுக்காமல் சிரித்துகொண்டே காரில் ஏறிவிட்டார்.

565

சிங்கள சீடியுடன் மைத்திரியை துரத்திய மெக்ரே!

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் அடங்கிய ‘நோ பயர் சோன்’ ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கு முயற்சிக்கப்பட்டது.
யுத்த சூன்ய வலயம் (நோ பயர் சோன்) ஆவணப்பட தயாரிப்பாளரான செனல்-4 திரைப்பட தயாரிப்பாளர் கெலும் மெக்ரேவே அந்த ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை வழங்குவதற்கு முயற்சித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை கணக்கிலெடுக்காமல் சிரித்துகொண்டே காரில் ஏறிவிட்டார். அதனையடுத்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் வழங்குவதற்கு முயன்றார். அமைச்சர் மங்கள சமரவீர, கெலும் மெக்ரேயிடம் ஏதோ கூறிவிட்டு காரில் ஏறிவிட்டார்.
இதனையடுத்து அங்கு நின்றுகொண்டிருந்த பாதுகாப்பு ஊழியர், கெலும் மெக்ரேயை அங்கிருந்து செல்லுமாறு பணிக்கவே அவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்.
சிங்கள மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த ஆவணப்படம், பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் நேற்று திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடுக்கக்கூடாது என்றும் அவர் கோரினார்.
இதன்மூலம் போரின் போது நடந்த உண்மைகளை சிங்கள மக்கள் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் மெக்ரே குறிப்பிட்டார்.
சமாதானத்தை விரும்பும் சிங்கள மக்கள் உண்மையை அறிந்துவிடக்கூடாது என்பதை பிழை செய்தோர் எண்ணம் கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் தமது படத்தின் மூலம் விடுதலைப் புலிகளை நியாயப்படுத்தவில்லை என்றும் மெக்ரே சுட்டிக்காட்டியுள்ளார்.

 

SHARE