தீர்வு விடயத்தில் அக்கறை கொள்ளக்கூடிய ஒருவருக்கே தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும்

450

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களுக்கானத் தீர்வு விடயத்தில் திடகாத்திரமான முடிவுகளை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எடுத்திருக்கிறது. ஆனா லும் தென்னிலங்கை அரசானது போலி யான வாக்குறுதிகளை வழங்கி உடன் படிக்கைகளைக் கிழித்தெறிந்திருக்கிறது. பலருடைய எதிர்பார்ப்புக்களும் என்ன வென்றால் ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தரப்பு சார்பாக வேட்பாளர் ஒரு வரை நிறுத்தக்கூடாது என்பதாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு வேட்பாளரை நிறுத்துவதாகவிருந்தால் வடகிழக்கு, மலையகம் அடங்கலாகவே இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கவேண்டும். அத்துடன் வேட்பாளராக இரா.சம்பந்தன் அல்லது மாவை சேனாதிராஜா, முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அல்லது தமிழ்க் கட்சிகளின் ஏகோபித்த தீர்மானங்களின் படி ஒருவரை தெரிவு செய்யவேண்டும்.

ஆனால் அதற்கான கால அவகாசங்கள் இம்முறை சரியாக வழங்கப்படவில்லை. இவ்வாறு ஒரு வரை நிறுத்தவேண்டுமாகவிருந்தால் ஒவ்வொரு விடயங்களையும் அலசி ஆராய்ந்து வடக்கு கிழக்கு, மலையகம், ஏனைய பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மத்தியில் ஏன் தமிழ் மக்கள் சார்பாக ஒருவர் களமிறக்கப்படவேண்டும் என்பது குறித்து பரப்புரைகள் முற்கூட்டியே செய்யப்பட்டிருக்கவேண்டும். உரிய முறை யில் இதனை ஒழங்குபடுத்தத் தவறி னால் பாரிய தோல்வியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கநேரிடும். இது தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புக்கு அபகீர்த்தியினையே உருவாக்கும். ஆனாலும் கால காலமாக தென்னிலங்கையின் இரு பிரதான பெரும்பான்மைக் கட்சிகள் இரு வேட்பாளர்களை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கும். அதில் ஒருவரே ஜனாதிபதியாக வர வாய்ப்பு இருக்கிறது. குறைந்தது தமிழ் தரப்பில் ஒரு வேட்பாளரை நிறுத்தினால் 30 இலட்சம் வாக்குகளை பெறவேண்டும். அவ்வாறு பெற்றால் தான் தென்னிலங்கைக்கு சவால்விடும் நிலை உருவாக்கப்படும் என்பதையும் தமிழ் வேட்பாளரை தேர்தலில் களமிறக்கக் கூறுபவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பெரும்பான்மைக் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை பெறவேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. ஆகவே இனிவரும் காலங்களில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் ஏமாற்றமடையும் நிலை உருவாக்கப் படுமாகவிருந்தால், அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் ஒன்றிணைவின் ஊடாக பலமான ஒரு அணியை உருவாக்க முடியும். ‘இனப்படுகொலை’ என்கிற விடயத்தில் வடகிழக்கு தமிழ் பேசும் மக்கள் கோத்தபாயவை ஆதரிக்க மாட்டார்கள். இருந்தாலும் ஐ.தே.க அரசும் ஆட்சியில் இருந்தபோது 200க்கும் மேற்பட்ட படு கொலைகளைச் செய்துள்ளது. அதனையும் மக்கள் கவனத்தில் கொண்டுள்ளனர். வடகிழக்கு மக்களது வாக்களிப்பு என்பது சஜித் அவர்களை நோக்கியதாகவே இம்முறை அமையும்.

தமிழ் மக்களின் அரசியல் ரீதி யான அணுகுமுறைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஒரு பலம் பொருந்திய கட்சியாக திகழ்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் காலப்போக்கில் தமிழ் மக்களின் தீர்வுத்திட்டத்தில் திடகாத்திரமான விடயங்களை மேற்கொள்ளும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ்க் கட்சிகள் இணைந்து நல்வழிப்படுத்துவதை விட்டுவிட்டு, அரசிற்கு சோரம் போய் வெட்டிப்பேச்சுக்களை மேற்கொள்வது தொடர்ந்தும் தமிழினத்திற்கு அபாய நிலையை தோற்றுவிக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

SHARE