சிங்களப் பேரினவாதிகளுக்கு வக்காளத்து வாங்கும் தமிழ் பேசும் தலைமைகளினால் தமிழினத்திற்குப் பேராபத்து

535

நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விடயத்தை அலசி ஆராய்வதற்கு முன் இந்த நாட்டிலே இனப்படுகொலை ஒன்று இடம்பெற்று இருக்கின்றது. இந்த இனப்படுகொலையானது 1983 ஆம் காலப்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 242 இடங்களில் இனப்படுகொலைகள் இடம் பெற்றிருக்கின்றது. இதிலே 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருக்கின்றார்கள். 50,000 க்கும் மேற்பட்ட போராளிகள் வீரச்சாவை தழுவிக் கொண்டிருக்கிறார்கள். இதிலே ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், விடுதலைப்புலிகள் போன்ற இயக்கங்களும் போரிட்டி ருக்கின்றார்கள்.
உண்மையிலே ஈழப் போரின் இறுதிக்கட்டத்திலே என்ன நடந்தது என்ற விடயத்தைப் பற்றி பார்க்கும் பொழுது இன்று அரசி யல் செய்கின்ற பலரும் இவ்வாறான அதாவது சிங்கள பேரினவாதிகளால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மறந்து செயற்படுவது என்பது உண்மையிலே தமிழ் மக்கள் என்ற ரீதியிலே ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகவே இருக்கின்றது.

இன்று வடக்கிலும் கிழக்கிலும் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற அரசியலை பார்க்கும் பொழுது, ஏழு ஆட்சியாளர்கள் இதுவரை இலங்கையை ஆட்சி செய்திருக் கிறார்கள். இவர்களில் எவருமே தமிழ் மக்களுக்கானத் தீர்வைப் பெற்றுத்தரும் நோக்கில் செயற்படவில்லை. ஈழப்போர் இறுதிக்கட்டத்தை எட்டுகின்ற பொழுது உலக நாடுகள் இணைந்து தான் இந்த போராட்டத்தை முடித்து வைத்தது. இதிலே குறிப்பாக அமெரிக்கா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 52 நாடுகளும் 22 சர்வதேச அமைப்புக்களும் தலையிட்டு தான் இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்தார்களே தவிர வடகிழக்கு இணையக்கூடாது என செயற்பட்ட ஜேவிபி மற்றும் சிங்கள பேரினவாதிகள் இன்று இந்த ஜனாதிபதித் தேர்தல் வருகின்ற பொழுது பலரும் மகிந்த ராஜபக்சவுக்கும், கோத்தபாய ராஜபக்சவுக்கும், சஜித் பிரேமதாச விற்கும் இன்று ஆதரவைத் தெரிவிக்கின்றார்கள். இவர்கள் அனைவருமே தமிழ் மக்களுடைய போராட்டத்தை மழுங்கடிப்பதற்கு மிக முக்கியமாக செயற்பட்டவர்கள். பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றுக் குவித்தவர்கள்.

மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச போன்றோரின் ஆட்சிக்காலத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை ஈழப்போரின் இறுதிக் கட்டத்திலே கோத்த பாயவின் தலைமையின் கீழ் கொலை செய்தார்கள். ஆனால் இதற்கு குறித்த காலப்பகுதியில் இராணுவத் தளபதியாகவிருந்த சரத் பொன்சேகா அவர்கள் தான் மிக முக்கியமாக அமைகிறார். இவரைவிட இலங்கை இராணுவ படையணிகளின் பிரிகேடியர்களும் சிலர் அடங்குவர். இவர்கள் அனை வரும் இணைந்துதான் ஈழப்போரின் இறுதிக்கட்டத்திலே யுத்த குற்ற மீறல்களை செய்திருக்கிறார்கள்.

ஈழக்கோரிக்கைகளை முன் வைத்து போராடிய ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், ஈபிடிபி போன்ற இயக்கங்களை மாறி மாறி இலங்கையை ஆட்சிசெய்த ஆட்சியாளர்கள் மிக இலாவகமாக கையாண்டு வந்திருக்கிறார்கள் என்பதுவே உண்மையான விடயம். ஆகவே நாங்கள்; ஒரு ஈழக்கோரிக்கைக்காக போரா டிய தமிழினம் இன்று அடிமைக ளாக அரச தரப்பை நாம் ஆதரிப்பது என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்று.
நாங்கள் எமது தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற தேவையில் அதற்கு ஒரு சரியான தலைமையை நாங்கள் ஜனாதிபதி தேர்தலிலே களமிறக்கவில்லை. அதற்கான கால நேரங்கள் போதிய தாக இருக்கவில்லை என்பதும் ஒரு குறைபாடாகவே இருக்கிறது. ஆகவே எதிர்வரும் காலங்களிலே செய்கின்ற தவறுகளை நினைத்துப் பாருங்கள். சுயநலமாகச் சிந்திப்பதை விடுத்து எமது இனத்துக்காக இன நலனுக்காக சிந்திக்க ஆரம்பிக்கவேண்டும்.

கோத்தபாய ராஜபக்ச வந்தால் என்ன, சஜித் பிரேமதாச வந்தால் என்ன. தமிழ் மக்களுக்கான தீர்வை அவர்கள் தரப்போவதில்லை. 13ஆம் திருத்தச்சட்டத்தை கூட அவர்கள் அமுல்படுத்தப் போவதில்லை. வெறும் பகடைக் காய்களாக மாத்திரம் தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் பயன்படுத்த முடியுமென்று நினைத்து தமது தேவைக்கேற்பப் பயன்படுத்துகிறார்கள். அவ்வளவும் தான். வடக்கு, கிழக்கு, மலையகம் இணைந்து தமிழ் மக்கள் சார்பில் ஒரு வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துகின்ற பொழுது சுமார் 27 இலட்சம் வாக்குகளைப் பெற முடியும். அரசாங்கத்திற்கு சவா லான ஒரு கட்டமைப்பாக இந்த தமிழ் பேசும் மக்கள்;, முஸ்லிம்களையும் இணைத்துத் தான் கூறுகின்றேன், இந்த வாக்குகள் அனைத்தும் ஒன்று சேர்கின்ற பொழுது குறைந்தபட்சம்; 25 இலட்சம் வாக்குகளை எடுத்தால் கூட அது தமிழ் பேசும் மக்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் ஒரு செய்தியை சொல்லக்கூடியதாகத் தான் அமையும்.
இன்று கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவு செலுத்தும் தமிழ் தரப்பும் இல்லாமலில்லை. வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களுக்கான தீர்வு அதாவது தேசி யம், சுயநிர்ணய உரிமையானது ஒரு ஆயுத போராட்டத்தினால் ஏற்படுத்த முடியாது போனாலும் அஹிம்சை போராட்டத்தினால் ஏற்படுத்தப்பட முடியும். மலையக மக்கள் இங்கு வந்து எத்தனை வருடங்கள் கழிந்த பின்னர் அவர்களுக்கு பிறப்புச்சான்றிதழ் எடுக்கக்கூடிய சூழ்நிலைகள் உருவானது என்பதையெல்லாம் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இன்றும் அவர்கள் தமது அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தாருங்கள் என போராடியே வருகின்றனர்.
விடுதலைப்புலிகளின் போராட்ட மும் கூட 30 ஆண்டுகளை கடந்த நிலையிலே சர்வதேசம் வரையிலும் இன்று அவர்களுடைய போராட்டம் வளர்ந்திருக்கிறது. அந்த வகை யிலே தரை, வான், கடல் என்று தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் வளர்ச்சி அபாரமான வளர்ச்சியாக இருந்தது. இதிலே அன்று ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப் போன்ற கட்சிகளை விடுதலைப்புலிகளுடன் மோதவிட்டு அல்லது முஸ்லிம் தரப்புக்களை விடுதலைப்புலிகளுடன் மோதவிட்டு இவ்வாறெல்லாம் இலங்கை அரசு திட்டமிட்ட வகையிலே இந்த போராட்டத்தை மழுங்கடிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அப்பொழுது அனை வருமே கொட்டியா என்று தான் அரசால் கூறப்பட்டார்கள். எந்த தமிழ் பாராளுமன்ற அல்லது பொதுமக்களோ கொழும்பிலே நடமாடக்கூட முடியாத அளவு கைது செய்கின்ற நடவடிக்கைகள் தீவிரமாக அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டன.

கருணா – பிரபாகரன் பிளவை ஏற்படுத்தியதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தை மழுங்கடித்து இந்த யுத்தத்தை வெற்றிகொள்ள முடியுமென்று சர்வதேசமும் நம்பிக்கை கொண்டது. அதுதான் அவர்களின் திட்டமாக அமைந்தது. ஆனால் உண்மையிலே கருணா அவர்கள் தமி ழீழ விடுதலைப்புலிகளை விட்டு பிரியாதிருந்திருந்தால் இன்றும் தொடர்ந்தும் யுத்தம் இடம்பெற்றிருக்கும் அல்லது தமி ழீழம் தமிழர்களுடைய கையிலே கிடைத்திருக்கும் என்னும் செய்தியை நாங்கள் இங்கு உறுதிபடக்கூற வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளை பிரித்தாளும் தந்திரோபாயத்தை மேற்கொண்டு அலிசாஹிர் மௌலானா என்பவருடன் இணைந்து தமிழீழ விடுதலைப்புலிகளை பிரித்தாளும் இராஜதந்திர நடவடிக்கையை மேற்கொண்டு இன்று கருணா அவர்களை ஒரு போராட்ட சூழலில் இருந்து மாற்றி வேறு திசைக்கு அவரைத் திருப்பிவிட்டார்கள். கருணாம்மான் என்பவர் சாதாரண மான மனிதன் அல்ல. அவர் ஒரு யுத்த வீரன். ஆனால் தற்பொழுது அவர் காட்டிக்கொடுப்புக்களையும் அதாவது அவரைப் பிடித்த பின் அல்லது அவர் இந்த பகுதிக்கு வந்த பின் அவருக்கு சுகபோகங்களை சலுகைகளை வழங்கியிருப்பதாக நாங்கள் அறிந்திருக்கின்றோம்.

ஆகவே இந்த சிங்கள பேரினவாத தலைவர்கள் அனைவரும் தமி ழீழ விடுதலைப்புலிகளினுடைய போராட்டத்தை முற்று முழுதாக அழித்து தமி ழீழ விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இல்லா தொழிக்கின்ற நடவடிக்கை களைத் தான் இவர்கள் செய்து வருகின்றார்களே தவிர, வடகிழக்கை இணைக்கவோ அல்லது 13 ஆம் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கிலோ இவர்கள் இங்கு செயற்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமி ழீழ விடுதலைப்புலிகளினால் தான் உருவாக்கப்பட்டது. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தராகி எனப்படும் ஊடகவியலாளர் சிவராம் என்பவர் இந்த உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்திருந்தார்.
இந்த ஈழப்போரின் காலகட்டத்திலே 44 மூவினத்தையும் சார்ந்த ஊடகவியலாளர்களும் கொலை செய்யப்பட்டி ருக்கின்றார்கள். 20க்கும் மேற்பட்ட ஊடகவிய லாளர்கள் வெளிநாட்டிலே அரசியல் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். எனி னும் இன்றும் பல ஊடகவிய லாளர்களுக்கும் ஊடக நிறு வனங்களுக்கும் அச்சுறுத் தல்கள் ஏற்படுத்தப்படுகிறது. கடத்தப்பட்டுக் காணாமல் போன பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலைமை மீண்டும் இந்த நாட்டிலே வருவதற்கான வாய்ப்புக்கள் தென்படுகிறது என்பது உண்மையே. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்திலும் ஊடக தணிக்கை இடம்பெற்றது. அப்போது சரியான செய்திகளை துல்லியமாக வழங்க முடியாத ஒரு சூழ்நிலை இருந்தது. பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும், மேற்கிலும் என பல ஊடகவியலாளர்கள் ஸ்ரீலங்கா படைகளால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அது போன்று ஒட்டுக்குழுக்களாலும்; பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆகவே ஒரு விடயத்தை நாம் தெளிவா கப் புரிந்துகொள்ள வேண்டும். மீண்டும் ஒரு ஆயுதம் ஏந்துகின்ற கலாச்சாரம் இந்த நாட்டிலே உருவாகவிடக்கூடாது.
முஸ்லிம் அடிப்படைத் தீவிரவாதிகளது பயங்கரவாதம் நாட்டில் உருவாகிறது என்றால் வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் மக்கள் என்ன காரணத்திற்காக கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்க வேண்டும். அண்மைய ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதல் தொடர்பில் இன்னமும் சரியான உண்மைத்தன்மையைக் வெளிக் கொண்டு வருவதற்கு பயப்படு கிறார்கள். இதை வெளி யில் கூறிவிட்டால் நாளை எங்களுக்கும் துப்பாக்கிச்சூடுதான் என்று பயப்படுகிறார்கள். தொடர்ந்தும் சிங்களப் பேரினவாதிகளுக்கு வக்காளத்து வாங்கிக்கொண்டிருக்கும் செயற்பாடு களில் தமிழ் பேசும் தலைமைகள் ஈடுபடுவார்களாகவிருந்தால் அது தமிழினத்திற்கு நிச்சயம் பேராபத்தாகவே அமையும். போலி யான வாக்குறுதிகளால் தொடர்ந்தும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசுக ளால் நாம் ஏமாற்றப்பட்டே வருகி றோம். தமிழ் பேசும் மக்களாகிய நாம், வடகிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து பயணிக்க முன்வருவோமானால் அது சிங்களப் பேரினவாதிகளுக்கு பேரிடியாகத்தான் அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மறவன்

SHARE