இந்த நாட்டிலே கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் உண்மையில் இந்த நாட்டில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது, என்ன நடக்கப்போகின்றது அல்லது தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போகின்ற நன்மைகள் என்ன? அல்லது இவர் ஏன் இவ்வாறு ஜனாதிபதியாக சிங்களப் பெரும்பான்மையினரால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்? என பல கேள்விகள் மக்கள் மத்தியில் இருக்கின்றது.
உண்மையில் முதலாவது விடயம் இந்த தேர்தல் வெற்றி என்பது ஒரு நிரந்தரமற்ற வெற்றியாகத் தான் காணப்படுகின்றது. காரணம் பாராளுமன்றத்தை கலைக்க முடியாத நிலையில் தற்காலிகமாக அதாவது காபந்து அரசாங்கம் ஒன்றை ஜனாதிபதி அவர்கள் அமைத்துள்ளார். அதில் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் வெகு விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பாராளுமன்றத் தேர்தல் ஒன்று நடைபெறவிருக்கிறது. அதன் பின்னர் புதிய பிரத மர் மற்றும் அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். நான்கு அல்லது ஐந்து மாதங்களுடன் இந்த காபந்து அரசாங்கம் முடிவுக்கு வரும். மக்கள் பிரதி நிதிகளை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வதன் ஊடாகத் தான் பெரும்பான்மைப் பலத்துடன் உண்மையிலே அது ஒரு நிலை யான அரசாங்கமாக இயங்க முடியும்.
வடக்கு – கிழக்கிலே கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை நூற்றுக்கு பத்து வீதமான தமிழ் மக்கள் தான் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அதுவும் அரச தரப்புக்கு வக்காளத்து வாங்கும் பல கட்சிகள் வடகிழக்கில் இருக்கின்றன. இறுதியில் அந்த வக்காளத்து வாங்கிய அனைத்துக் கட்சிகளும் வடகிழக்கில் தோல்வி யடைந்துள்ளன. ஜனாதிபதி கோட்டாபயவுக்கு வடகிழக்கில் அதிகமான வாக்குகளை இவர்களால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. தமிழ் மக்கள் தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற ஒரு நிலைப்பாட்டைக் கையிலே எடுத்து இத் தேர்தலில் செயற்பட்டிருக்கிறார்கள். சஜித் பிரேமதாச அல்லது கோட்டாபய ராஜபக்ஷ இருவரில் ஒருவர் தான் இந்நாட்டின் ஜனாதிபதி என்கிற நிலைதான் இருந்தது. தமிழ் மக்கள் உண்மையிலே வன்முறையை மேற்கொள்ளாது அல்லது அதனைக் கொண்டுவராத ஒரு தலை வரை தெரிவு செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.
ஆனால் தென்னிலங்கையிலே பிரச்சாரம் வேறுவிதமாக மாற்றிய மைக்கப்பட்டிருந்தது. அங்கு இனவாதம், மதவாதம் தேசிய வாதம் போன்ற விடயங்கள் பேசு பொருளாக மேற்கொள்ளப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார்.
இது ஒரு புறமிருக்க, தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை எந்த அரசாங்கம் வந்தாலும் கொடுக்காது என்பதை ஜனாதிபதித் தேர்தல் எடுத்துக் காட்டுகின்றது. சிங்கள மக்களு டைய பெரும்;பான்மை இந்த நாட்டிலே உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகக் கூறுகின்றார்கள். பெரும்பான்மை இருந்தாலும் கூட ஏன் இந்தப் போராட்டம் இந்த நாட்டிலே உருவானது. தமிழ் மக்களுக்கான அடக்குமுறை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வந்த காரணத்தினால் தான் உண்மையிலே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டியதொரு சூழல் இந்த நாட்டிலே உருவானது. மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடுகின்ற இந்தச் சூழ்நிலையை கோட்டாபய அவர்கள் உருவாக்குவாரா? அல்லது உருவாக்காமல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்வாரா? என்கின்ற ஒரு விடயத்தை நாங்கள் இங்கு அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.
உலக நாடுகளைப் பொறுத்த வரையில் அவர்கள் ஆயுத சந்தையிலே ஒரு வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஆயுத சந்தையிலே அவர்களுடைய ஆயுதங்கள் பாவிக்கப்படவேண்டும் என்ப திலே அவர்கள் குறியாக இருக்கின் றார்கள். அது மட்டுமல்லாது கடல் மார்க்கமாக தாங்கள் சென்று வருவதற்கு எந்தவிதத் தடைகளும் எந்தவொரு நாட்டிலும் இருக்கக்கூடாது. குறிப்பாக இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருக்கின்றது. ஆகவே இந்த நாட்டை தன் கைவ சம் வைத்திருக்கவேண்டும் என்று அமெரிக்கா, சீனா, இந்தியா முயற்சித்துக் கொண்டு இருக்கின்றனர். இப் போட்டியினுடைய விளைவு தான் தமிழீழம் கூட கிடைக்காமல் போனது. ஆனால் இந்த தமிழீழம் மலரும். மலருகின்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
அதேநேரம் வட-கிழக்கு இணைப்பு ஏற்படுத்தப்படவேண்டும் என்றொரு நிலைப்பாடு இருக்க, ஆனாலும் தவிர்க்க முடியாத காரணத்தினால் சர்வதேசப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடக்கப்பட்ட நிலையிலே யுத்தம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த யுத்தமானது மாவிலாறிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு முள்ளிவாய்க் காலிலே முடிவடையும் ஒரு சூழல் ஏற்பட்டது. இதிலே ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் கொல்லப் பட்டிருக்கின்றார்கள். சுமார் முப்பத்து ஐந்தாயிரம் போரா ளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார்கள்.
தமிழ் மக்களாகிய நாங்கள் ஒன்றைச் சிந்திக்கவேண்டும். தமிழ் மக்களுக்கான உரிமை மறுக்கப்படுகின்ற போது உண்மையிலே இந்த ஆயுதக் கலாச்சாரம் இந்த மண்ணிலே உருவானது. அதேபோன்று தென்னிலங்கையைப் பொறுத்த வரையிலே பல ஆயிரக்கணக்கில் ஜே.வி.பியினர் கொலை செய்யப்பட்டார்கள். மீண்டும் இந்த நாட்டிலே ஒரு ஐந்தாம் கட்ட ஈழப்போர் ஆரம்பிப்பதற்கு இந்த அரசாங்கம் உறுதுணையாகி விடக்கூடாது. அதாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் தெளிவாகச் சிந்திக்கவேண்டும். இந்தமுறை தமிழ் மக்கள் ஏன் கோட்டாபய அவர்களுக்கு வாக்களிக்கவில்லை என்று. இக் காரணத்தை நிச்சயமாக அவர்கள் அறிந்து கொள்ளவேண்டும். இவர்கள் தமிழ் மக்களுடைய மனதில் தொடர்ந்தும் இடம்பிடிப்பார்களா? அல்லது தொடர்ந்தும் வன்முறைக் கலாச்சாரங்கள், வெள்ளைவான் கடத்தல்கள், கிறீஸ் பூதங்கள் போன்ற விடயங்களை இந்நாட்டில் கட்டவிழ்த்து விடுவார்களா? என்ற சந்தேகம் தற்பொழுது எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
எங்கு பார்த்தாலும் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டில் இராணுவத்தினுடைய பிரசன்னம் கூடுதலாக இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் இராணுவம் நிறுத்தப் பட்டிருக்கின்றது. ஆகவே இந்த நடைமுறை உண்மையிலே மாற்றப்பட வேண்டும். மாவீரர்களுக்கு விளக்கேற்றி அவர்களுக்கு அஞ்சலி செலுத்து வதைக் கூட மட்டுப்படுத்தி யிருந்தார்கள். ஒரு சில இடங்களில் தான் அனுஷ்டிக்கப்பட்டது. அதாவது படையினருக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்றொரு விடயத்தை அதாவது வடக்குக் கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளிலே அவர்கள் வெளியிட்டிருந்தார்கள். உண்மையிலே இது ஒரு மனவேதனை அளிக்கக்கூடிய விடயம்.
ஆனாலும் மேற்கூறிய விடயங்களை நன்கு சிந்தித்து, இந்த மஹிந்த தரப்பு அல்லது ஜனாதிபதி கோட்டாபய அவர்கள் விளங்கிக் கொள்வார்களாக இருந்தால் நிச்சயம் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வு எட்டப்படும். இந்த அரசாங்கத்தை அணுகிப்போகக்கூடிய சூழல் உருவாக்கப்படும்.
அண்மையில் எமது தினப்புயல் ஊடகத்திற்குக் கூட அச்சுறுத்தல் விடப்பட்டி ருக்கின்றது. எமது ஊடகவிய லாளர்களின் விபரங்களைப் பதிவு செய்து தருமாறு அரச தரப்பினரால் கேட்கப்பட்டிருக்கின்றது. இவ்வா றெல்லாம் நடைபெறும் என்று தெரிந்து தான் இந்த ஊடகத்துறைக்குள் நாம் காலடி வைத்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் மீண்டுமொரு வன்முறைக் கலாச்சாரம் அல்லது ஆயுதக் கலாச்சாரம் உருவாக்கப்படுமாக இருந்தால் இந்நாடு பாரிய பின்னடைவுகளைச் சந்திக்கக்கூடும்.
ஆகவே இது ஒரு ஜன நாயக நாடு என்கிற ரீதியில் நாட்டு மக்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வழிநடத்திச் செல்லவேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அனைத்தும் ரஷ்யாவினுடைய ஜனாதிபதியின் நடவடிக்கைகள் போன்று திடீர் திருப்பமாக அமை வதை அவதானிக்க முடிகின்றது. ஆகவே இந்த ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வாக அமைந்துவிடப் போவதில்லை. தமிழ் மக்களாகிய நாம் எமது அடுத்தடுத்த அரசியல் களங்களைப் பலப்படுத்தவேண்டிய தேவை இருக்கின்றது. அனைத்து தமிழ்த் தரப்பும் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் செயற்படவேண்டிய காலம் ஏற்பட்டிருக்கின்றது என்பதையே இந்த ஜனாதிபதித் தேர்தல் எமக்கு எடுத்துரைத்திருக்கின்றது.
(இரணியன்)