கரப்பான் பூச்சிக்கு ‘பர்சனாலிட்டி’ உண்டா?

404

வீட்டில் சர்வசாதாரணமாக சுற்றித் திரியும் கரப்பான் பூச்சிகள் எல்லாம் ஒரே மாதிரிதான் நமக்குத் தெரிகின்றன. ஆனால் பிரஸ்சல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், அவற்றுக்கு தனிப்பட்ட ஆளுமைகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. கரப்பான்களுக்கு வெளிச்சம் ஆகாது. அவை குழுவாக இருப்பதை அதிகம் விரும்புபவை. இந்த நிலையில், ௧௬ கரப்பான்களை அதிக வெளிச்சத்தில் இருக்கும்படி ஆய்வுக்கூடத்தில் ஏற்பாடுகள் செய்தனர் விஞ்ஞானிகள். ஆனால், ஒரே இடத்தில் மட்டும் வெளிச்சம்
இல்லாத மாதிரி ஏற்பாடுகள் செய்தனர். அந்த இருட்டான பகுதிக்கு கரப்பான்கள் இயல்பாகவே போய் ஒதுங்கிக்கொள்ள முயன்றன. ஆனால் எல்லா கரப்பான்களும் உடனே போய் ஒளியவில்லை.கரப்பான்கள் குழுவாக இயங்கினாலும், அவை குறைந்த தகவல்களை வைத்து சிக்கலான முடிவுகள் எடுக்கக்கூடியவை. இருந்தாலும், தங்களுக்குப் பிடித்த இருளான பகுதிக்குப் போக முடிவெடுப்பதில், சில கரப்பான்கள் தாமதித்தன. மூன்று மாத ஆய்வுக்குப் பின், அப்படி கரப்பான்கள் சுயமாக யோசித்து முடிவெடுப்பதற்குக் காரணம், அவை ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு, ஆளுமை இருப்பதுதான் காரணம் என்ற முடிவுக்கு வந்தனர் பிரஸ்சல்ஸ் விஞ்ஞானிகள். கரையான் போன்ற குழுவாக இயங்கும் பூச்சியினங்களில் இந்த மனோபாவம் கிடையாது.

SHARE