தான் கண்காணிக்கப்படுவதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க கூறிய குற்றச்சாட்டு ஆதரமற்றது : இலங்கை ஜனாதிபதி!!

923

Mahinda-Rajapaksa1தான் கண்காணிக்கப்படுவதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க அவர்கள் கூறிய குற்றச்சாட்டு ஆதரமற்றது என்று இலங்கை ஜனாதிபதி அலுவலகம் நிராகரித்துள்ளது.

இலங்கையின் முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்க அவர்கள், தன்னை இலங்கை அரசாங்க உளவுப் பிரிவினர் கடுமையாகக் கண்காணித்து வருவதாக குற்றஞ்சாட்டியதற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் பதிலளித்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க அவர்கள் சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்களுக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளார்.

இது குறித்து இலங்கை ஜானதிபதியின் தமிழ் ஊடகங்கள் மற்றும் தமிழ் விவகார இணைப்பாளரான ஆர். சிவராசா அவர்கள் தமிழோசையிடம் கூறுகையில், லலித் வீரதுங்க அவர்கள் தனது கடிதத்தில் சந்திரிகா அவர்கள் கூறிய குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்த எந்தவிதமான ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.

SHARE